மீனராசி ரேவதி நட்சத்திரம் எளிமையான வாழ்க்கையை வாழ்பவரும், கல்விமான், தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பவரும், எந்த ஒரு செயலிலும், காரியங்களிலும் இரு பக்கங்களையும் காண்பவரும், செயல் தடுமாற்றங்கள் உள்ளவரும், தன் செயல், தன்னுடைய புத்தி சாதுர்யமே தனக்கு எதிராக உணர்ந்தவரும் ரேவதி 1,2 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எக்கலையும், கற்கும் திறன் உடையவருமான தாங்கள் கடந்து வந்த பாதை கடந்த 11 மாதத்திற்கு முன்பாக புதிய நட்புகள் மூலமாக புதிய வழிகள் மூலமாக, கூட்டுதொழில் மூலமாக வருமானங்கள் ஈட்டி வந்திருப்பீர்கள். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றி இருக்கலாம். ஆன்மிக ரீதியான பயணங்களை மேற்கொண்டு இருப்பீர்கள். தங்களுடைய உழைப்பால் கிடைக்கக் கூடிய லாபங்களும், தற்காத்துக் கொள்ள வழி இல்லாத சுழல் ஏற்பட்டது. தாயார் வழி மூலமாக வரவுகளும், லாபங்களும் பெற்று இருக்கலாம். அடுத்து வந்த கால கட்டங்களில் தங்களுடைய சுப விரயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். தொழில் நிமிர்த்தமாக அலைச்சல்களும், தொழில் மாற்றங்களும், கடன் பெற்று இருப்பீர்கள். தற்போது செவ்வாய், சனி சேர்க்கைக்கான பலன்கள். குடும்ப ரீதியான பண செலவுகளும், குடும்பத்தில...