அபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள் கி.பி.1977க்குப் பிறகு செவ்வாய்க்கிரகமானது தொடர்ந்து 9 மாதங்கள் நீசமாகப்போகிறது. யுத்தகாரகன், ரத்த காரகன், சகோதரக்காரகன் என போற்றப்படும் செவ்வாய் கடகராசியில் 7.10.2009 முதல் 15.5.2010 வரை நீசமாக சஞ்சரிக்கப்போகிறார்.இதனால், ராணுவம், காவல்துறையிலும் கலகம் வரலாம்.சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் ராணுவம் கலகம் செய்தது ஞாபமிருக்கிறதா? அதுபோல!!! தவிர, மேஷம், விருச்சிகம் ராசியில் பிறந்த மனிதர்கள், நிறுவனங்கள், மாநிலங்கள், நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுகளில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கொரியாக்கள்.(அதனால்தான் அங்கே விதவிதமான யுத்தக்கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கராத்தே, குங்பூ,டோக்வாண்டே மற்றும் 100 விதமான சண்டைக்கலைகள்) நம்ம பக்கத்து நாடு இலங்கையின் ராசி விருச்சிகம்.அதன் தற்போதய அதிபர் ராஜபக்ஷேயின் பிறந்த ராசியும் விருச்சிகம். தமிழர்களின் துருவ நட்சத்திரம் பிரபாகரன் அவர்களின் பிறந்த ராசியும் விருச்சிகம்!!! ஆக இலங்கையில் என்னமோ நடக்கப்போகுது. சரி அதை பேப்பரில் பார்த்துக் கொள்ளலாம். தனி ...