அபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள்
கி.பி.1977க்குப் பிறகு செவ்வாய்க்கிரகமானது தொடர்ந்து 9 மாதங்கள் நீசமாகப்போகிறது. யுத்தகாரகன், ரத்த காரகன், சகோதரக்காரகன் என போற்றப்படும் செவ்வாய் கடகராசியில் 7.10.2009 முதல் 15.5.2010 வரை நீசமாக சஞ்சரிக்கப்போகிறார்.இதனால், ராணுவம், காவல்துறையிலும் கலகம் வரலாம்.சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் ராணுவம் கலகம் செய்தது ஞாபமிருக்கிறதா? அதுபோல!!!
தவிர, மேஷம், விருச்சிகம் ராசியில் பிறந்த மனிதர்கள், நிறுவனங்கள், மாநிலங்கள், நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுகளில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கொரியாக்கள்.(அதனால்தான் அங்கே விதவிதமான யுத்தக்கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கராத்தே, குங்பூ,டோக்வாண்டே மற்றும் 100 விதமான சண்டைக்கலைகள்) நம்ம பக்கத்து நாடு இலங்கையின் ராசி விருச்சிகம்.அதன் தற்போதய அதிபர் ராஜபக்ஷேயின் பிறந்த ராசியும் விருச்சிகம். தமிழர்களின் துருவ நட்சத்திரம் பிரபாகரன் அவர்களின் பிறந்த ராசியும் விருச்சிகம்!!! ஆக இலங்கையில் என்னமோ நடக்கப்போகுது. சரி அதை பேப்பரில் பார்த்துக் கொள்ளலாம்.
தனி மனிதர் வாழ்வில் என்ன நடக்கும்? என்பதை பிரபல ஜோதிடர் ஏ।எம்।ஜே। என்பவர் நட்சத்திர வாரியாகக் கணித்திருக்கிறார்।உங்களது பிறந்த நட்சத்திரம் எதுவோ அதன்படி இந்த பலன்கள் உங்கள் வாழ்வில் செயல்படும்। இந்தப் பலன்கள் எண்பது சதவிகிதம் துல்லியமானவை।மீதி இருபது சதவீதம் அவரவர் ஜாதக பூர்வபுண்ணியத்தைப் பொறுத்து மாறுபடும்.
இவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்। பல டி।வி। நிகழ்ச்சிகளில் துல்லியமான ஜோதிடப்பலன்களை கணித்துக்கூறி பலரது வாழ்வில் ஒளியேற்றியவர்। இருபத்திரண்டு ஆண்டுகளாக ஜோதிட ஆராய்ச்சி செய்துவருபவர்.myathistam@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
இனி செவ்வாய் பெயர்ச்சி பலன்களைக்காணலாம்:
அசுபதி: தெய்வீக அருளைப் பெற்றவரும், தனவான் சாஸ்திரங்களை அறிந்தவருமாகிய அசுவினி நட்சத்திரக்காரர்களே!
நீங்கள் மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பவராகவும் தைரியசாலியாகவும் இருக்கும் தாங்கள் 7.10.2009 முதல் 16.11.2009 வரை இருப்பிடப்பிரச்சனை, தயாரின் உடல்நலத்தில் சீர்கேடு, நண்பர்களிடையே பகை,தொழிலில் மந்தம் அல்லது தொழில் சார்ந்த குளறுபடிகள் ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரையில் இந்த குளறுபடிகள் மாறி எதிர்பாராத தொழில் வளர்ச்சி லாபங்களும் ஏற்படும்.இருப்பிடப்பிரச்னை நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.தங்களுக்கு அல்லது தங்களைச் சார்ந்தவருக்கோ சுபகாரியம் உண்டாகும்.வண்டி வாகன வசதிகள் உருவாகும்.
23.12.2009 முதல் 13.3.2009 வரை மன தைரியம் அதிகரிக்கும்.தங்களது வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவர். முன்கோபமும் பிடிவாதமும் இந்நேரங்களில் தங்களிடம் அதிகம் காணப்படும்.உங்களுக்கு அல்லது உங்களது ரத்த உறவுகளுக்கு ஏற்படும் காயம் அல்லது நோய்க்கு தகுந்த மருத்துவ நிபுணர்(எக்ஸ்பர்ட்)ரிடம் ஆலோசனை கேட்கும் நிலை உருவாகும்.தொழில்நிலை சுமாராகும்.நிலம் சார்ந்த விஷயங்களில் சிறு லாபம் ஏற்படும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை சுப நன்மைகள் உண்டாகும்.இளைய சகோதரத்தாலும் கடனாலும் சில தொல்லைகள் வந்து தீரும்.
இக்காலகட்டத்தில் திருப்பரங்குன்றம் முருகக் கடவுளை அடிக்கடி வழிபட நன்று।
பரணி : நற்குணங்களும் நற்செயல்களையும் செய்வதை தனது சுபாவமாக வைத்திருப்பவரே!
எதிரிகளை எளிதில் வெல்பவரே!பிடிவாதத்தால் எதையும் சாதிப்பவரே!தங்களுக்கு 7.10.2009 முதல் 16.11.2009 வரை நன்மையுண்டு. தாயார் மற்றும் நண்பர்களாலும் இருப்பிடவகையிலும் நன்மைகள் பல உண்டாகும்.வண்டி வாகன லாபமும் உண்டு.
16.11.2009 முதல் 23.12.2009 வரை வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும்.தொழிலில் பல்வேறு நல்மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறி தெரியத்துவங்கும்.தன்னைவிட மூத்தவர்களுடன் தீய சேர்க்கை சேர வாய்ப்பு உண்டாகும். மனைவி/பெண்கள் வழியில் விரையங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இக்காலகட்டத்தை கவனமாக கடக்கவேண்டும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை மனைவி வகையில் மருத்துவ செலவு, காயங்கள் ஏற்படுதல் நடக்கும். எச்சரிக்கை.உணர்ச்சிக்கு இடம் தராமல் வாழ்க்கைப் பயணத்தை கொண்டு செலுத்தவும்.யாருக்கும் வாக்குதரக் கூடாது.ஜாமீன் போடக்கூடாது.பலவிதங்களில் விரையங்கள் ஏற்படலாம்.
தினமும் முருக காயத்ரி மந்திரம் ஜபிக்கவும்.
கார்த்திகை :நல்பாக்கியங்களும் கடும் கோபத்தையும் ஆழ்ந்த பாசத்தையும் கொண்டவரே!பலவித திறமைகளால் எங்கும் எப்போதும் முதன்மையாகத் திகழுபவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை உங்கள் குடும்ப மூத்த உறுப்பினரால் வைத்தியச்செலவு உண்டாகும். எதிர்பாராத விரையங்களும், வாகனப்பழுதும் ஏற்படும்.வீட்டில் அதிகம் பேசவேண்டாம்.குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும்.
16.11.2009 முதல் 23.11.2009 வரை தொழில் ரீதியாக பிரச்னை ஏற்பட்டு நீங்கும். தொழிலில் லாபம் உண்டாகும். விற்காத பொருட்கள் விற்கும். மேலதிகாரி பாராட்டுவார்.கார்த்திகையன்று திருச்செந்தூரானை நேரில் வழிபடவும். நன்மைகள் பெருகி தீமைகள் குறையும்.
23.11.2009 முதல் 13.3.2010 வரை இல்லத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும்.தொழில் ரீதியாக புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய முதலீடுகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். தாயார்- மனைவி வழி மருத்துவச் செலவு குறையும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை மூத்த சகோதர்கள், மனைவி வழி உறவுகளால் கசப்பான சம்பவங்கள் நடக்கும்.சனிதிசை புக்தி நடப்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆட்படலாம்.விரையச்செலவுகள் ஏற்படும்.வியாழதிசை நடப்பவர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும்.சுக்கிர திசை நடப்பவர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானத்தைச் சந்திக்க வேண்டிவரும்.
ரோகிணி : அழகும் கம்பீரமும் உடையவரே! எல்லோருக்கும் நட்பாகத் திகழுபவரே! தனவந்தர்களிடம் செல்வாக்கு பெற்றவரே!7.10.2009 முதல் 16.11.2009 வரை குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.சகோதர வகையில் சண்டை ஏற்பட்டு தீரும். பூர்வீக சொத்து சார்ந்த நடவடிக்கை நன்மை தரும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை தங்களது மரியாதை குறையும். குழப்பமாகப் பேசுவீர்கள்.தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும்.வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதம் கெட்ட பெயரைத் தரும்.வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது.
23.12.2009 முதல் 13.3.2010 வரை குழந்தைகளால் செலவும் குடும்பத்தில் சுபச்செலவும் ஏற்படும்.தொழிலில் நல்ல மற்றும் இட மாற்றம் ஏற்படும்.கேட்ட இடங்களில் பண உதவி கிடைக்கும்.
13।3.2010 முதல் 15.5.2010 வரை எல்லாச் செயல்களிலும் சர்வ நிதானம் அவசியம்.சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.நரம்பு சார் பிரச்னைகள் வரலாம்.
மிருகசீரிடம் : ஒருவரைப் பார்த்த உடனே அவரது எண்ணம் என்ன? என்பதை கண்டறியும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களே! தாங்கள் கோபத்தைவிட்டுவிட்டால் அற்புதமனிதர்தான்.தங்கள் நட்சத்திரங்களில்தான் பெரும் செல்வந்தர்கள், பக்திமான்கள்,திறமையானவர்கள் பிறக்கிறார்கள்.
7.10.2009 முதல் 16.11.2009 வரை திடீர் பணவரவுகள், பதவி உயர்வு மற்றும் விரும்பிய இட மாற்றங்கள் கிடைக்கும்.குடும்பத்துக்கு ஆடம்பரப்பொருட்கள் வாங்கிக்குவிப்பீர்கள்.குடும்ப வைத்தியச்செலவு குறையும்.மூத்தோரால் ஆதாயம் உண்டு.16.11.2009 முதல் 23.12.2009 வரை சுபச்செலவு உண்டு.சிலருக்கு ஈமச்சடங்குகள் செய்யும் சந்தர்ப்பம் அமையும்.(குடும்பத்தில் பெரியவர்கள் மறையலாம்).தவறான சகவாசத்தை ஒதுக்கி வைத்தால் தேவையற்ற வம்பு வழக்கு அண்டாது.வீட்டில் பிரச்னை செய்யாதீர்கள்.23.12.2009 முதல் 13.3.2010 வரை தொழில்மாறுதல் மற்றும் இடமாறுதல் உண்டு.சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.வாகனத்தில் செல்லும்போது மிகக்கவனம் அவசியம்.தொழில் ரீதியாக வாக்கு தராதீர்கள்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். தைரியம் கூடும். வாழ்க்கையில் மிக முக்கிய ஆனால் சிறு மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : எவரிடமும் எளிதில் பழகும் குணமுடையவரே! 7.10.2009 முதல் 16.11.2009 வரை இதுவரை இருந்து வந்த பணப்பிரச்னைகள், குடும்பப்பிரச்னைகள் தீரும். தங்களது வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.மருத்துவ செலவு குறையும்.தாய் குடியிருக்கும் வீடு இவற்றால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை ஆன்மீகப்பயணங்கள் செல்வீர்கள். புதிய ரகசிய தொடர்புகள் ஏற்படும். வெளிநாட்டுப்பயணமுயற்சி வெற்றி பெறும். மூத்த சகோதரவர்க்கத்தால் லாபம் உண்டு.23.12.2009 முதல் 13.3.2010 வரை கடன் தொல்லைகள் ஏற்படும். தொழில்துறையினருக்கு முடக்கம் நீங்கும்.வாழ்க்கைத் துணை பிரச்னை நீங்கும்.13.3.2010 முதல் 15.5.2010 வரை வார்த்தையில் நிதானம் தேவை.விஷ வண்டுகள் பயம் உண்டு. மனக்குழப்பம் ஏற்படும்.வாக்குறுதி தரக்கூடாது.சிறு பிரச்னைகளில் ஒதுங்கிக் கொள்ளவும்.வீரத்தைக் காட்டக் கூடாது.
புனர்பூசம் : மனதுக்குள் அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்பவரே!7.10.2009 முதல் 16.11.2009 வரை உடல்நலக்குறைவு ஏற்படும்.ரத்த அழுத்த நோய் பாதிப்பைத் தரும்.இளைய சகோதரத்தால் செலவு உண்டு.எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை தொழில் முன்னேற்றம் ஏற்படும்.அப்பா வழியில் உதவிகள் கிடைக்கும்.23.12.2009 முதல் 13.3.2010 வரை பூர்வீகசொத்தில் லாபமும், சிலருக்கு புத்திரப்பாக்கியமும் உண்டாகும்.தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகிவிடும். திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு உண்டாகும்.(லாட்டரி போல).13।3.2010 முதல் 15.5.2010 வரை குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.கனவுத் தொல்லை உண்டு.பிதுர்காரியம் செய்வீர்கள்.
பூசம் : இல்லற இன்பத்தில் அளவற்ற ஆர்வமும், பெரியவர்களிடம் நாசூக்காக பழகத் தெரிந்த பூச நட்சத்திரக்காரர்களே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை நீண்ட காலமாக உடலில் இருந்துவந்த நோய்கள் நீங்கும்.வாழ்க்கைத்துணையாலும் நிம்மதி உருவாகும். பூர்விக சொத்துக்கள் மூலமும் குழந்தைகள் மூலமும் லாபமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இதுவரை ஏற்பட்டிருந்த காரியத்தடைகள், முடக்கப்பட்டிருந்த தொழில் வாய்ப்புகள் நீங்கி படு சுறுசுறுப்பாக செயல்படத்துவங்குவீர்கள்.16.11.2009 முதல் 23.12.2009 வரை இளைய சகோதரத்தால் தொந்தரவுகள் உண்டு.வெளிநாட்டு வர்த்தகம் புரிவோர் புதிய வாய்ப்புகள் அடைவர். தாய்வழி, மாமா வழியில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
23.12.2009 முதல் 13.3.2010 வரை பொறுமை மிக அவசியம்.வாகனப்பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.செவ்வாய் திசை, செவ்வாய் புக்தி நடக்கும் பூச நட்சத்திரக்காரர்கள் ஆயுள் ஹோமம் செய்வது அவசியம்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை சனி புக்தி நடப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் வம்பு வழக்கு வர வாய்ப்புண்டு. உடலில் தீக்காயங்கள் அல்லது கோபத்தால் மிகப்பெரிய மனிதரைப் பகைக்குமளவுக்கு அனாவசிய கோபம் ஏற்படலாம்.பொறுமை அவசியம். ராகு தசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கு கடன் தீர வாய்ப்பு.கணவன் மனைவி வாக்குவாதம் தவிர்க்கவும்.
ஆயில்யம் : அழகான வாழ்க்கைத் துணையைக் கொண்டவரே! கல் நெஞ்சக்காரர்களாகவும் அதி புத்திசாலித்தனமாகவும் வாழ்நாள் முழுக்க செயல்படுபவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை சகல செயல்தடுமாற்றங்களும் தீர்ந்து செயல்புயல் ஆகப்போகிறீர்கள். தொழில்வளர்ச்சி விறுவிறுப்பாகும்.வீடு மனையால் அபரித லாபம் உண்டு. சிலருக்கு விரையச்செலவு ஏற்படும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை சுப காரியங்கள் நடக்கும். மனைவி/கணவர் வழியில் செலவுகள் குறையும்.புதிய இன்பம் தரும் நட்பு அமையும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை பூர்வீக சொத்துக்கள் மற்றும் தொழில் லாபம் சற்றும் எதிர்பாராத அளவுக்கு கிடைக்கும். செவ்வாய் / வியாழ திசை நடப்பவர்களுக்கு மிகப்பெரும் தன வரவு உண்டு.குடும்பப்பிரச்னைகள் நீங்கும்.மதுரை அருகில் உள்ள திருவாதையூர் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்ய மிகச்சிறந்த வாழ்க்கையை தினமும் காண்பீர்கள்.இங்கு சாபம் பெற்ற சனிபகவான் சாப நிவர்த்தி அடைந்த சிவாலயம் இருக்கிறது.
13।3.2010 முதல் 15.5.2010 வரை வாகனப்பயணத்தில் எச்சரிக்கை!தாயாரின் உடல் நலனில் அக்கறை அவசியம்.வாக்குறுதி தரக்கூடாது.
மகம் : சிவந்த கண்களும் சாஸ்திர ஆராய்ச்சியும் மந்த குணமும், யாவருக்கும் அதிக செலவு செய்பவரும், பிறரை வசீகரிக்கும் முகமும் கொண்டவரே!7.10.2009 முதல் 16.11.2009 வரை: சுப விரையங்கள் ஏற்படும்.தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நிம்மதியாக தூங்கத் துவங்கும் காலம் இது.தங்களுடைய செயலாலும் வார்த்தைகளாலும் இது வரை ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும்.குடும்பத்தில் வாதம் செய்யக்கூடாது.அசட்டு தைரியம் வரும்.நெருங்கிய நண்பர்கள் மற்றும் தாயாரின் உதவி கிட்டும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை:மூத்த சகோதர சகோதரியால் நன்மை உண்டு.சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.கூட்டுத் தொழில் வாய்ப்பு ஏற்படும்.பதவி உயர்வு ஏற்படும்.23.12.2009 முதல் 13.3.2010 வரை: வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபமுண்டு. கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடைபெறும்.நட்பு, வாகனப்பயணத்தில் கவனம் தேவை.வாக்குறுதி தராதீர்.சனி புக்தி நடப்பவர்கள் வாக்குறுதி தரக்கூடாது.13.3.2010 முதல் 15.5.2010 வரை:கோபம் குறைக்கவும். விவேகம் மிகத் தேவை. பூர்வீகசொத்துக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சிலர் பூர்வீகசொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்.
பூரம் : புத்திசாதுர்யம் கொண்டவரே! தைரியமும் சிறந்த வியாபார யுக்திகளை கையாள்பவரே! உடலில் காய வடு கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை: இனி விரையச் செலவுகள் குறையும். பலமுறை முயற்சி எடுத்து தாமதப்பட்ட வர்த்தக திட்டங்கள் வெற்றி பெறும்.பூர்வீக சொத்து சார்ந்த பேச்சுவார்த்தை ஏற்படும்.தொழில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.பயம் வரும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை: புதிய பதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்துப் போகவும். மனைவி,குழந்தை உடல் நலத்தில் அதிஅக்கறை தேவை.23.12.2009 முதல் 13.3.2010 வரை: தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.சக பாலினரால் மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கடும் முயற்சிக்குப் பிறகு கிடைக்கும். இடம் வீடு ஆதாயத்துடன் விற்பனை செய்வீர்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை: மனைவியால் குடும்பத்தில் நிம்மதி குறையும்.கருத்து வேறுபாடு ஏற்படும்.உத்திரம்: நன்றி மறவாதவரே! பிறரிடம் இனிய வார்த்தை பேசுபவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை: குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் திகழும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் கிடைக்கும்.இளைய சகோதரத்தால் செலவு ஏற்படும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை: இருப்பிட மாற்றம் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.தொழில் ரீதியாகபுதிய முயற்சி எடுப்பீர்கள்.தந்தை வழியில் செலவு வந்து நீங்கும்.தங்கள் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படும். நிதானம் பேச்சில் தேவை.கால் பாதங்களுக்கு வைத்திய செலவு உண்டு.
23.12.2009 முதல் 13.3.2010 வரை: திடீர் சுப நிகழ்ச்சி நடக்கும்.வீடு மனையால் ஆதாயம் உண்டு. தம்பதி நெருக்கம் அதிகரிக்கும்.சனி மற்றும் குருதிசை நடப்பவர்களுக்கு சுபச்செய்தி உண்டு.ஏஜன்சி தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : வீட்டுப்பெரியவர்கள் சிவலோகப் பதவியடைவார்கள்.பூர்வீக சொத்துப்பிரச்னை தலைதூக்கும்.
மேலும் விபரங்களுக்கு:ஜோதிட ஆராய்ச்சியாளர் A.M.J. myathistam@gmail.कॉम
அஸ்தம் : ஐந்து நட்சத்திரங்களின் சேர்க்கை என்றும் மனோக்காரகனின் முழு ஆசி பெற்ற நட்சத்திரம் அஸ்தம் ஆகும்.எல்லோரிடமும் சுலபமாகப் பழகும் குணமும்,சங்கீதம், நாட்டியம் இவற்றில் ஆர்வம் கொண்டவரும் பெண்கள் மீது மதிப்பு கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை:வீடு, நிலம், தாய், மனைவியால் எதிர்பாராத தன லாபம் செவ்வாய் அருளால் தங்களுக்கு கிடைக்கும்.மூத்த சகோதர வழியில் விரையமும்,தொழிலில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பும் ஏற்படும்.புதிய தொழில்கள் அமையும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை:தொழில் லாபம் உண்டு. வாழ்க்கைத்துணையால் சிறுசிறு குழப்பமுண்டு.இடமாற்றம் உண்டு.கடனை அடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்.23.12.2009 முதல் 13.3.2010 வரை : குழந்தைகள் வழியில் செலவுகள் உண்டு.பிறந்த ஜாதகத்தில் விபரீதராஜ யோகம், சகட யோகம் உள்ளோருக்கு புதையல் போன்ற அதிர்ஷ்டம் கிடைக்கும்.உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை :தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டும்.வாகனப்பயணத்தில் கவனம் தேவை.சுபவிரையச் செலவுகள் ஏற்படும்.மேலும் தொடர்புக்கு: myathistam@gmail.com
சித்திரை :பிறரது குணமறிந்து நடப்பவர், திறமைசாலி,ஊர் சுற்றுவதில் ஆர்வமிகுதி, தன் காரியத்தில் சுறுசுறுப்பு உடைய சித்திரை நட்சத்திரக்காரர்களே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை :இதுவரை இருந்துவந்த வீடு , நிலம் சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் மனவெறுப்பு வரும்.பொறுமையாக இருந்தால் நிம்மதியாக வாழ முடியும்.உங்களது உழைப்பின் பலன் உங்களை வந்து சேரும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : தகப்பனார் வழியில் விரையச்செலவுகள் வந்து சேரும்.செல்வச் சேர்க்கை உண்டு.தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.23.12.2009 முதல் 13.3.2010 வரை :எதிர்பாராத இடத்திலிருந்து கடன் உதவி கிடைக்கும்.பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீரும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை :விரையங்களை தவிர்க்க முடியாது.வாகனப்பயணத்தில் கவனம்.ரத்தம்,நரம்பு சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.தொழில்பங்குதாரர்களிடையே கோபத்தை அளவோடு காட்டவும்.1976 முதல் 1979க்குள் பிறந்தவர்கள் ஸ்ரீகாலபைரவரை தினமும் வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.மேலும் தொடர்புக்கு:myathistam@gmail.com
சுவாதி :யாரையும் நம்பும்படி பேசி தன்காரியத்தை செயல்படுத்துபவரும், முன்கோபியும், பல்வேறு யோசனைகள் கொண்டவரும்,பெரியோர்களிடம் மரியாதையும்,தெய்வ வழிபாடுகளில் ஆர்வமும் நிறைய (தூக்கத்தில்) கனவும் காண்பவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை :இழந்த தைரியத்தைப் பெற்று வருமானத்தை பெருக்குவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.வாழ்க்கைத்துணையால் வருமானமும், தந்தை வழியால் செலவும் ஏற்படும்.இளைய சகோதரத்தின் ஆரோக்யம் கெடும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை : வாகனம், மின்சாரம் இவற்றில் மிகுந்த கவனம் தேவை.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது.செவ்வாய் புக்தி நடப்பவர்கள் வாழ்க்கைத்துணையை பிரிய வேண்டியிருக்கும்.ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு, வியாபார ஒப்பந்தங்களில் மிகுந்த எச்சரிக்கையும் பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :நண்பர்களிடம் விரோதமும், குழந்தைகளுக்கு வைத்தியச் செலவும்,பொருளாதார சிக்கல்களும் ஏற்படும்.பயணத்தின் போது கவனமாக இல்லாவிட்டால் தலை,முகம் பகுதியில் படுகாயம் ஏற்படலாம்.சிலருக்கு வாய் ,உதடு ,சளி சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்.
13।3.2010 முதல் 15.5.2010 வரை :தொழில், வேலை இவற்றில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் அல்லது புத்திர பாக்யம் கிட்டிடும்.
விசாகம் : கல்வி கற்பதில் ஊக்கம் உள்ளவரும், தகுதிக்கு மீறிய காரியங்களை சாதிக்க விரும்புபவரும், குள்ளமானவரும், சண்டைப்பிரியரும், செல்வந்தரும், சாமர்த்தியமாகப்பேசுவதில் திறமையும் கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை : இதுவரை தங்களைக் கண்டும் காணாமல் இருந்து வந்த தங்கள் உறவினர்களும் நண்பர்களும் தங்களைத் தேடி வருவர். தொழில் முடக்கம் நீங்கும்.மனபயம் நீங்கும். சில புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை :தந்தைவழியில் மனக்குழப்பங்களும் மருத்துவச்செலவுகளும் வரும்.விரையச்செலவுகள் தவிர்க்க முடியாதவை.பெண்களால் அவப்பெயர் ஏற்படும். சிலருக்கு மூத்த சகோதர வகையில் பணவரவு உண்டு.
23.12.2009 முதல் 13.3.2010 வரை : உங்களின் பிறந்த ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் உள்ளவர்களுக்கும், சனி திசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கும் எதிர்பாராத வகையில் வருமானமும் பதவிகளும் கிடைக்கும்.எவருக்கும் வாக்குறுதி வழங்கக்கூடாது.சிலருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.எதிரிகள் செய்யும் காரியங்களால் உங்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : குடும்பத்தில் அமைதியற்ற நிலை உருவாகும்.பலருடைய கண்டனத்திற்கும், விமரிசனத்துக்கும் ஆளாவீர்கள்.குழந்தைகள் மற்றும் மனைவி வழியில் விரையங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.மேலும் விபரமறிய:myathistam@gmail.comஐத் தொடர்பு கொள்ளுங்கள்.
அனுஷம் :படிப்பதில் ஆர்வமும், உங்களுக்கு தீங்கு செய்தவருக்கும் நன்மைகள் மட்டுமே செய்ய விரும்பும் தாங்கள்,மேன்மையான பதவி அந்தஸ்தில் வாழ்வீர்கள்.பிறர் மனம் கோணாமல் நடப்பவர்கள்.தர்ம சிந்தனையும் ஊர் சுற்றுவதில் பிரியமும் அதிக புத்திர சந்தானமும் உடையவ்ர்கள் தாங்கள்!!!
7.10.2009 முதல் 16.11.2009 வரை :தங்களுடைய செயல்பாடு சுறுசுறுப்பற்ற நிலையும் மந்தமான உடல் நிலையும் கொண்டிருப்பீர்கள்.இளைய சகோதரத்தால் கருத்துவேறுபாடு ஏற்படும்.தம்பதியரிடையே தவறாகப்புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டு கருத்துவேறுபாடு உருவாகலாம்.16.11.2009 முதல் 23.12.2009 வரை : எதிர்பாராத பணவரவும் புதிய நட்பும் ஏற்படும்.குழந்தைகளால் கல்வி சார்ந்த சுபச்செலவு ஏற்படும்.தந்தை வழியில் துக்ககரமான செய்தி அல்லது சம்பவம் நடக்கும்.23.12.2009 முதல் 13.3.2010 வரை : இடமாற்றம் உண்டு.கணுக்காலில் ரத்தகாயம் ஏற்படும்.கவனம் தேவை.உயரமான கட்டிடங்களில் வேலை செய்வோர்களும், மின்சாரம் சார்ந்த பணியாளர்களும் மிகக்கவனமாக இருப்பது அவசியம்.சுக்கிர திசை நடப்பவர்களுக்கு மர்மஸ்தானத்தில் நோய் ஏற்படலாம். இக்காலகட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வணங்கிவர பாதிப்புகள் குறையும்.13.3.2010 முதல் 15.5.2010 வரை :கடன்களை அடைத்துவிடுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும்.விற்காமல் இருந்த வீடு, மனை நல்ல விலைக்கு விற்பனையாகும்.இரும்பு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.சட்டம் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒரு சில சிரமங்களை சந்தித்தாலும் பதவி உயர்வை அடைவர்.பாராட்டுக்களும் கிடைக்கும்.மேலும் விபரமறிய:myathistam@gmail.com ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.
கேட்டை:தர்ம குணமும் முன்கோபமும் , குறும்புத்தனமும் கொண்டவரே! அழகாகப்பேசக்கூடியவரும், கலகம் குறுக்குபுத்தி + பிறந்த வீட்டைப்பெருமையாகப்பேசுபவரும்,கணிதத்தில் வல்லமைமிக்கவரும், தாமதத்திருமணயோகமும் கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை : பூர்வீக சொத்துக்களாலும் மூத்த சகோதரர்களாலும் தனவரவு பெறுவீர்கள்.மனைவி மூலமாக மகிழ்ச்சியும் லாபமும் கிடைக்கும். தேவைப்படும் உதவிகள் எல்லாப்பக்கத்திலிருந்தும் கிடைக்கும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை:இதயம், வயிறு மார்புப்பகுதி நோயால் பாதிக்கப்படலாம். தகுந்த மருத்துவசிகிச்சை செய்யவும்.உண்ணும் உணவில் கவனம் தேவை.இதுவரை இருந்து வந்த முழங்கால் வலி, கால்களிலிருந்து வந்த எரிச்சல் குணமடையும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :குடியிருக்கும் இல்லத்தில் பிரச்னைகள் உண்டாகும்.தாய் வழியில் கசப்புகள் ஏற்படலாம்.இளைய சகோதரத்தால் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.அனுசரித்துச்செல்க!அளவோடு பேசவும்.அல்லது மவுனமே உங்களை காக்கும்.தமிழ்நாட்டில் தேனி அருகில் உள்ள உத்தம பாளையத்தில் 1000 ஆண்டு பழமையான சிவாலயம் செண்று வழிபட்டால் மேற்கண்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.வருமுன் காப்பதும் நன்று!13.3.2010 முதல் 15.5.2010 வரை :இதுவரை இருந்துவந்த மந்த நிலை மாறி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தந்தைவழி ஏற்பட்டிருந்த மனக்கசப்பு நீங்கும்.குழந்தைகளால் ஏற்பட்ட வைத்தியச்செலவு குறையும்.சிலருக்கு புதிய ஆடம்பரப்பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.சிலருக்கு நல்ல உயர்ந்த இடத்தில் மகிழ்ச்சியான சூழலில் திருமணம் நடக்கும்.பிறந்த இடத்திலிருந்து 100 கி.மீ.தூரத்தில் திருமணம் நடைபெறும்.எந்த சூழ்நிலையிலும் தங்களைத்தாங்களே குழப்பிக்கொள்ளக்கூடாது.தங்கள் சக்திக்கு உட்பட்ட காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.இப்படிச்செய்தால் வெற்றியும் புகழும் ஏற்படும்.மேலும் விபரமறிய :myathistam@gmail।com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.
உத்திராடம் : கர்வமும், செல்வ வளமும் கொண்டவரே!வர்த்தக நோக்கமும் சுறுசுறுப்பும் தொடை/முழங்கால்/கால்களில் மச்சமும் கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை : கடந்த 40 நாட்களாக மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கோபதாபங்களுடன் பலருடன் சண்டை சச்சரவு ஏற்பட்டிருக்கும்.குறிப்பாக மனைவி,தொழில் பங்குதாரர்கள், உடன்பணிபுரிவோர்- இவர்களிடம் பிரச்னை ஏற்பட்டிருக்கும்.இந்த காலகட்டத்தில் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைத்துக்கொள்வீர்கள். மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமைக்கான வழிகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி கடந்த காலத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு விலகி சரளமான பணப்புழக்கம் ஏற்படும்.தந்தைவழி மருத்துவச்செலவுகள் குறையும்.கடந்த காலங்களில் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும்.இப்போது அவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை :தொழில் நிலையில் சில மாற்றங்களைக்காண்பீர்கள்.தொழில் அபிவிருத்திக்காக சில இடங்களில் கடன் பெறுவீர்கள். வாகனப்பயணங்களில் எச்சரிக்கை!முகமைத்தொழிலில் ஈடுபடுவோர் இருமடங்கு வருமானமடைவார்கள்.ராகு திசை நடக்கும் அன்பர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு பெறுவார்கள்.23.12.2009 முதல் 13.3.2010 வரை: விலகியிருந்த , கண்டுகொள்ளாமலிருந்த உறவினர்கள் தேடிவருவர்.விற்பனையாகாமலிருந்த சொத்துக்கள் விற்பனையாகும்.சனிதிசை, சனி புக்தி நடைபெறுபவர்களுக்கு தனலாபம் கிடைக்கும்.புதன் திசை, புதன் புக்தி நடப்பவர்களுக்கு மிகப்பெரிய மாரக கண்டம் உள்ளது.இவர்கள் வாழும் இடத்தில் உள்ள வடக்குபார்த்து ஆயுதம் ஏந்தி அமர்ந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.சிலருக்கு புதிய மகிழ்ச்சி தொடர்புகள் கிடைக்கும்.13.3.2010 முதல் 15.5.2010 வரை : மின்சாரம்,அடுப்பு,நீர்நிலைகள் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை.கடந்த காலங்களில் உடம்பில் ஏற்பட்ட காய வடு பற்றி மருத்துவரிடம் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை பெற வேண்டும்.இளைய சகோதரத்தால் சச்சரவு ஏற்படும்.மேலும் விபரமறிய:myathistam@gmail.com
திருவோணம் : தெய்வீக வழிபாடுகளில் பற்றுமிக்கவரும், தர்ம சிந்தனை கொண்டவரும் தனவானும் கர்வமுடன் நடந்து கொள்பவரும்,காம குணம் கொண்டவரும், சிறந்த அறிவாளியும் மந்த சுபாவமுடையவரும் உடைய தாங்கள்...7.10.2009 முதல் 16.11.2009 வரை :கடந்த காலங்களில் அதிக வேலைப்பளுவால் உடலில் சோர்வும் அசதியும்,எதிலும் பிடிப்பு இல்லாமல் விரக்தி மனப்பான்மையுடனும் இருந்திருப்பீர்கள்.இந்நிலை மாறி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பொங்கும்.தடைபட்ட காரியங்கள் நீங்கி சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.நீதிமன்றத்தில் இழுவையில் உள்ள வழக்குகள் சாதகமாகும்.சுபவிரையம் உண்டு.16.11.2009 முதல் 23.12.2009 வரை :தந்தையால் விரையம் உண்டு.தொல்லைகளும் ஏற்படும்.தாய், நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது.முறைதவறிய உறவுகள் ஏற்படும்.குடும்பத்தில் வாக்குவாதம் தவிர்க்கவும்.23.12.2009 முதல் 13.3.2010 வரை :பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.உறவினர், நண்பர்களிடையே மதிப்பு ஏற்படும்.சனிதிசை, சனி புக்தி நடப்பவர்களுக்கு பெரும்தன லாபம் ஏற்படும்.வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.சிலருக்கு லாட்டரி போன்ற பரிசு கிடைக்கும். தந்தைவழி பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து சுமுகமான முறையில் நட்பு ஏற்பட்டு லாபம் உங்களை வந்தடையும்.13.3.2010 முதல் 15.5.2010 வரை : தொழில் லாபகரமாக இயங்கும்.இடம்விட்டு இடம் மாற நினைப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.கடன் தொல்லை ஏற்படும்.காதல் வசப்பட்டு தங்களை குழப்பிக்கொள்ளாதீர்கள்.மேலும் விபரமறிய myathistam@gmail.com
அவிட்டம்: கோபத்தின் பிரதிநிதிகளே! அவசரபுத்தியும், மனைவியின் பேச்சுக்கு மதிப்புதருபவர்களே! கம்பீரத்தோற்றமும், உடலில் அடர்ந்த ரோமங்கள் உள்ளவரும், செல்வமும் செல்வாக்கு பெற்றவரும், முட்டிக்கால்களில் மச்சமும் கொண்டவரே!7.10.2009 முதல் 16.11.2009 வரை :கடந்த ஆண்டுகளில் இருந்த நிலையில்லாத தன்மையும், பிறரை நம்பி செயல்பட்ட செயல்களில் வீண் அலைச்சல்களும், விஷமிருகங்கள்-வண்டுகளால் ஏற்பட்ட காயங்கள் மறக்கமுடியாதவை.கடந்த 40 நாட்களாக தொழிலில் நல்ல வாய்ப்புகளும் பெரிய திட்டங்களும் வழக்குகளில் எதிரியை வென்றிருப்பீர்கள்.இனி, தாயார், சகோதர சகோதரிகளாலும் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும்.வாக்குறுதி தராதீர் எவருக்கும்! பணம் கொடுக்கல் வாங்கலில் மந்த நிலை ஏற்படும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை :தொழில் வளர்ச்சி உண்டு.கடன்களை திருப்பி செலுத்துவீர்கள்.பூர்வீக சொத்து பிரச்னைகள் நீங்கும்.குழந்தைகள் வழியிலும், ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.23.12.2009 முதல் 13.3.2010 வரை :இக்காலம் தங்களுக்கு ஒரு பொற்காலமாகும்!!!தங்களைக்கண்டு ஓடி ஒளிந்தவர்கள், எதிராக செயல்பட்டவர்கள் தங்களை வணங்கி வாழ்த்துவார்கள். கடன்கள் குறையும்.புதிய நட்புகள் அறிமுகமாகும்.தொழில் வளர்ச்சிக்கு பலர் உதவுவர்.சிலர் தொழில்ஸ்தானங்களை மாற்றியமைப்பீர்கள்.விற்காமலிருந்த நிலம் விற்பனையாகும்.தடைபட்ட திருமணம் நிச்சயமாகும்.தொழில் லாபங்கள் குறையும்.தொழில் அபிவிருத்திக்காக முதலீடு முடக்கும் சூழ்நிலை உண்டாகும்.நரம்பு சார்ந்த நோய்கள்,ரத்த அழுத்த நோய்கள் வந்து நீங்கும்.சிலருக்கு தோல்வியாதி அறிகுறி தென்படும்.முழுமையான மகிழ்ச்சியான பலன்கள் பெற திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசித்தீர்த்ததில் உள்ள சிவலிங்கத்தை வழிபட சிறப்பான பலன்கள் பெற்று வளமுடன் வாழ்க!!!
சதயம் : யாரையும் வசீகரிக்கும் தோற்றம் உள்ளவரும்,கரும் விழிகள் கொண்டவரும்,நினைத்த காரியத்தை முடிக்கும் நுண்ணறிவு படைத்தவரும், தீர யோசித்து எக்காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவரும், எவரையும் எளிதில் தன்வயப்படுத்தும் கோபக்காரருமாகிய தாங்கள் இதுவரை இழிவான பேச்சுக்கு ஆளாகியிருப்பீர்கள்.குடும்பசூழலால் தேக்க நிலையே எதிலும் இருந்திருக்கும்.7.10.2009 முதல் 16.11.2009 வரை : தேக்க நிலை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். இழந்த தைரியத்தைப்பெறுவீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறையை உருவாக்குவீர்கள்.பணப்புழக்கம் ஏற்படும்.உடலில் இருக்கும் மந்தநிலை நீங்கிட ஸ்ரீபழனி முருகனை நேரில் சென்று ஒருமுறை தரிசித்துவரவும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை : குழந்தைகள் வழியில் செலவு ஏற்படும்.குடும்பபெரியவர்களுக்கு கர்ம காரியங்கள் செய்வீர்கள். தந்தைக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.தொழில் உறுதியான கசப்பான முடிவுகள் எடுப்பீர்கள்.வாழ்க்கைத்துணையிடம் சூடான வர்த்தைகளைக் கேட்பீர்கள்.23.12.2009 முதல் 13.3.2010 வரை :தொழிலில் வருமானம் சிறப்பாக வந்து கொட்டும்.விரையங்கள் நீங்கும்.பெரிய பெரிய இடங்களில் நட்பு கிட்டும்.சுபவிரையம் உண்டு.புதிய வீடு,மனை போன்றவை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.வாழ்க்கைத்துணையிடம் மட்டும் பேச்சைக்குறைக்கவும்.சனி திசை,சனி புத்தி நடப்பவர்கள் சிறப்பான லாபமும், சிலருக்கு இருமடங்கு லாபமும் கிட்டும்.யோகங்கள் வரும் காலமிது.இக்காலகட்டத்தில் கிடைக்கும் பெருந்தன வரவுகளை நீண்டகால முதலீடுகளில் சேமிப்பது/முதலீடு/சேர்ப்பது எதிர்காலத்தில் நன்மைகளைத்தரும்.
ராகு புத்தி நடப்பவர்களுக்கு பதவி உயர்வு, தொழில் நிலைகளை உயர்த்திக்கொள்ளுதல் என பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.உப்புக்கல் என நினைத்த பொருள் வைரமாக மாறுவதைப் போன்று நான்காம் நிலையில் உள்ள ஒருவர் திடீரென முதல் நிலைக்கு (உச்சத்துக்கு) வருவர்.தங்கள் சக்திக்கு மீறிய காரியங்களில்/விஷயங்களில் தயவுசெய்து தலையிடாதீர்கள்.ஒருவேளை அப்படி தலையிட்டால் பிற்காலத்தில் கண்டனங்கள்/நஷ்டங்களுக்கு ஆளாவீர்கள்.
13।3.2010 முதல் 15.5.2010 வரை :விரையங்கள் தவிர்க்க முடியாதவை.பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவீர்கள்.உடலில் வேகமும்,கோபமும் ஏற்பட்டு ரத்தம்,நரம்பு சார்ந்த நோய்கள் உருவாகத்துவங்கும்.வாகனங்களில் பயணத்தின்போது கவனம் தேவை.குழந்தைகளுக்கு வைத்தியச்செலவு ஏற்படும்.இக்காலகட்டத்தில் துர்கையை வழிபட்டு நிம்மதியாக வாழ்க்கையை அமைத்துக்கொள்க!!!
பூரட்டாதி : ஆடை ஆபரணங்கள் அணிந்து மகிழ்பவரும், திடசரீரம் கொண்டவரும், பெரிய மனிதர்கள் நட்பும்,கவிஞரும் ஆசிரியரும்,வீட்டில் உணவு உண்பதை குணமாகவே கொண்டவரும்,கடனால் தொல்லையும்,குழந்தைகள் வழியில் குழப்பமான சூழ்நிலையும்,உழைப்புக்கேற்ற லாபத்தை அனுபவிக்க முடியாத நிலையும் குடும்பத்தில் சண்டை சச்சரவும் கடந்த 40 நாட்களாக இருந்திருக்கும்.
7.10.2009 முதல் 16.11.2009 வரை : குழந்தைகளால் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும்.குழந்தைகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும்.தங்களுடைய வார்த்தைகளில் கோபம் குறையும்.குழந்தைகளுக்கு பிரியப்பட்டதை வாங்கித்தருவீர்கள்.16.11.2009 முதல் 23.12.2009 வரை : இடம்,வீடு போன்றவற்றால் லாபம் கிடைக்கும்.தந்தைவழி சொத்துக்கள் மூலமாகவும் லாபமுண்டு.சிலருக்கு மருத்துவச்செலவு உண்டு.முகமைப்பணியிலிருப்போர் பெரும் பணலாபமடைவர்.சிலருக்கு தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.23.12.2009 முதல் 13.3.2010 வரை :லாபங்கள் அதிகமாக கிடைக்கும் நேரமிது.மூத்த சகோதரத்தால் ஆதரவும் உதவியும் லாபமும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் உண்டாகும்.முன்பு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.அரசு ஒப்பந்தப்பணிகளில் இருப்போருக்கு அதிக லாபம் உண்டாகும்.மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை உருவாகும்.13।3.2010 முதல் 15.5.2010 வரை :அரசு வழியில் தொந்தரவும் , கருத்துவேறுபாடுகளும் சகோதரர்/ரிகளிடையே கருத்துவேறுபாடுடன் வாக்குவாதமும் உண்டாகும்.உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும்.ஆடை ஆபரணச்சேர்க்கைக்கு அதிகம் செலவழிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதி மூலமாக தங்களுக்கு நெருக்கடி ஏற்படும்.தங்களுக்கு கீழே பணிபுரிபவர்களால் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்படும்.
உத்திரட்டாதி :சொல்வாக்கும், செல்வாக்கும் பெற்றவரும்,பக்திமானும்,கல்வியில் சிறந்தவரும், சஞ்சலத்துடன் வாழ்பவரும் ,இழிவான நண்பர்களைக் கொண்டவரும்,நண்பர்களின் வார்த்தைகளை கேட்பவரும்,தாராளமனம் கொண்டவரும்,பாதங்களில் காயத்தழும்பும் மச்சங்களும் கொண்டவருமான தாங்கள். . .
7.10.2009 முதல் 16.11.2009 வரை : எடுத்த முயற்சிகளில் தோல்வியும், தங்கள் பேசிய வார்த்தைகளால் மனக்கசப்பும், வண்டி வாகனங்களில் செல்லும்போது காயங்களும் ஏற்படக்கூடிய காலகட்டமிது.கவனமுடன் செயல்படவேண்டும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை :நண்பர்களால் ஆதாயமும், இருப்பிடத்தில் மாற்றங்களும், மனைவி குழந்தைகளால் மருத்துவச்செலவும்,தந்தையாருக்கு உஷ்ணசம்பந்தப்பட்ட நோய்கள் வருகைதந்து நீங்கும்.தொழிலில் பழைய நிலையை மாற்றி புதிய தொழில் செய்ய நினைப்பீர்கள்.பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை நீங்கி லாபம் அடைவீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை : தங்கள் நிலை உயரும்.பதவி உதவி சிலருக்கும், வெளிநாட்டுப்பயணம் சிலருக்கும் கிட்டும்.ஏற்கனவே உடலில் இருந்த நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு முறையான சிகிச்சை பெறுவீர்கள்.குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.சுக்கிர திசை நடப்பவர்களுக்கு பெண்களால் ஆதாயம் கிட்டும்.குரு மங்கள யோகம், சகட யோகம் உள்ள அன்பர்கள் பூர்வ புண்ணியசாசனம், சானாதிபதி வலுப்பெற்றிருந்தால் (நல்ல நிலையிலிருந்தால்) மிகப்பெரிய தொகை லாபமாக கிடைக்கும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : வார்த்தையில் நிதானம் தேவை. எவருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. மூத்த சகோதரத்தால் பிரச்னை தங்களை தேடி வரும் நேரமிது.சரியான உறக்கம் இராது. தங்களை தாங்களே குழப்பிக்கொள்ளக்கூடாது. அமைதியாக இருக்கவும்.அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றம் போக வேண்டியிருக்கும்.கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் (ராகு பகவான் ஸ்தலம்) அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வருக!!!
மேலும் விபரமறிய: myathistam@gmail.com
ரேவதி :மனைவியிடம் பிரியம் கொண்டவரும்,அழகான தோற்றம் கொண்டவரும்,எளிமையாக வாழ்பவரும்,தன்னைப்பற்றி மேலாக நினைப்பவரும், நேர்மை,சத்தியம், சத்ருக்களை வெல்லும் குணம் கொண்டவரும், முன் ஜாக்கிரதை உள்ளவரும், 28 வயதில் இருமல் சுரம் போன்றவற்றால் பீடிக்கப்பட்டவரும், கணிதத்தில் வல்லவருமாகிய தாங்கள்
7.10.2009 முதல் 16.11.2009 வரை : இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி குழந்தைகள் மூலம் ஏற்பட்ட மருத்துவச்செலவுகள் குறைந்து கடன் தொந்தரவுகள் தீர்ந்து நிம்மதியான சூழ்நிலை உருவாகும்.தந்தையாருக்கு வைத்திய செலவு ஏற்படும்.மனைவி மூலம் தொந்தரவு ஏற்படும்.16.11.2009 முதல் 23.12.2009 வரை : விவசாயத்திலும், முகமைத்தொழிலிலும் உள்ளவர்களுக்கு இது பொற்காலமாகும்.மனைவிமூலமாக வருமானம் தேடிவரும்.மனைவி வழியில் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.அரசு வழியில் ஆதரவு கிடைக்கும்.23.12.2009 முதல் 13.3.2010 வரை :குடும்பத்தில்ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கி இளைய சகோதரர், சகோதரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.தங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்.தந்தை , தந்தைவழி ஆதரவும், ஆதாயமும் கிட்டும்.தங்களின் தாய்மாமனார் உடல்நிலையை பாதிக்கும்.தாய்மாமனுக்கு கெட்ட பெயர் உண்டாகும்.தங்கள உடலில் உள்ள ரத்த அழுத்த நோய்களை பரிசீலினை செய்து கொள்ள வேண்டும்.சிலருக்கு பாதங்களில் காயங்கள் அல்லது நோய் உருவாகும்.மூத்த சகோதரத்தால் திடீர் பணவருவாய் ஏற்படும்.13.3.2010 முதல் 15.5.2010 வரை : மனைவியின் கருத்தின் அடிப்படையில் ஒரு சில லாபங்கள் கிடைக்கும்.அரசு வழியில் கண்டனங்களும் அபராதங்களும் ஏற்படும்.வெளிநாடு சென்று வருபவர்கள் அபராதம் செலுத்துவார்கள்.மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் ஆலயம் சென்று வழிபட நன்மை உண்டாகும்.மேலும் விபரமறிய:myathistam@gmail.com
குறிப்பு: இந்த பலன்கள் அனைத்தும் அவரவர் பிறந்த ஜாதகப்படி 80% பொருந்தும். AMJ.CALL NO 8015769607

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்