கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 1, 2 பாதங்கள்



கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 1, 2 பாதங்கள்
மற்றவரின் நோக்கத்தை அறிந்தவரும் திட சரீரத்துடன் பக்திகொண்டு வாழ்பவரும் மற்றவர்களிடம் சச்சரவுகளை உருவாக்குபவரும் உணவு உண்பதில் பிரியம் கொண்டவரும் பித்த சம்பந்தப்பட்ட நோய்களை சந்தித்தவரும் தாங்கள் தங்கள் நலன் கருதி எடுக்கின்ற முயற்சிகளின் விரைவாக உள்ளே சென்று இறுதி முடிவு எடுக்க முடியாமல் சங்கடப்படும் வழக்கம் கொண்ட தங்களுக்கு இதுவரை நடந்தவை.
தங்களுடைய திறமையையும், ஒத்துழைப்பையும் ஓஹோ என்று பாராட்டி தங்கள் சுப காரியங்களைநிறைவேற்றிக் கொண்ட நண்பர்களை எண்ணிய பார்காதீர்கள்.தங்களுடைய வார்த்தையுடைய தாக்கத்தின் காரணமாக சங்கடங்களையும் பண முடக்கங்களையும் குடும்பத்தில் மகிழ்ச்சி யற்ற சூழ்நிலையும் கண்டு இருப்பீர்கள். காரணமேயில்லாமல் எவ்வாறு நடக்கிறதே என்று எண்ணி இருப்பீர்கள்.. ஒரு சிலர் பூர்விக சொத்துக்களையும் கொண்டு கடன் பெற்று தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பீர்கள். தந்தை வழி வைத்திய செலவுகள் செய்ய நேரிட்டு இருக்கலாம். இந்த கடிதத்ததை படிக்கும் நேரம் வரை தங்களுக்கு புரியாத நிகழ்ச்சிகள் கேள்விக்குறியாக இருக்கும். ஒரு சிலருக்கு தோல் வியாதிகள் ஏற்பட்டு மாற்று மருத்துவத்தில் குணம் ஏற்பட்டு இருக்கலாம்.
சனி, சேர்க்கை பலன்கள்
தங்கள் நிலையில் ஏற்பட்டு இருக்கின்ற மந்தமான போக்குகளும், காரிய தடைகளும், சித்திரை மாதம் முதல் வாரத்தில் நீங்கும். சதுர்த்தி திதி யில் பிறந்தவர்க்கு புதிய ராஜ்ய பரிபாலனைகளும் புதிய பதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். தங்களுடைய தொழில் ஸ்தானத்தில் ஏற்படிருக்கின்ற மூல பொருள்களின் தட்டுப்பாடு காரணங்களையும் காரணம் புரியாத செலவினங்களையும் மாற்றிவிடலாமா என்று சிந்தனை வரும். தொழில் நிமிர்த்தமாக புதிய கடன் முயற்சிகள் எடுப்பீர்கள். அதற்குரிய கடன்களை மாற்றி இன மக்களின் உதவியால் கிடைக்கபெருவீர். தொழில் ஸ்தானத்தில் இயந்திரங்களை கையாளும் பொது தங்களும் தங்களுடைய ஊழியர்கள் கனவத்தொடு எச்சரிக்கை படுகின்றர்கள். புதிய நட்பு வட்டரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பெண் நட்பு மூலமாக வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தொழில் வாய்ப்புகளையும் தெரிந்து கொள்வீர்கள். தங்களுடைய ராசி நாதனும் நட்சத்திர நாயகனும் இருவருமே வக்கிரம் பெற்று தீய அதி வழு பெற்ற கிரகங்களின் காரணமாக தங்கள் எடுக்கின்ற முடிவில் தடுமாற்றமும் குழப்ப நிலையும் காணப்படும். தாங்களின் குரு வழிபாட்டு ஸ்தலத்தின் படி நடந்து இக்கால கட்டத்தில் கடத்தலாம். 30 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு சிறு விபத்து சந்திப்பதோ எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படலாம் கவனம் தேவை. தங்களுடைய குழந்தைகளை எதிர்கால வாழ்க்கையின் நிர்ணயமாக்கும் சூழ்நிலை ஏற்படுகின்ற பண கஷ்டம், சில சங்கடங்களையும் தவிர்பதற்காக குல தெய்வ கோயிலுக்கு சென்று குறிப்பாக ஞாயிறுகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட உயரும். நன்மையும் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் நண்பர்களும் மாற்று சமுக நண்பர்கள் உழைப்புகளுடன் உன்னத பதவி கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். அடுத்த சந்தர்பத்தில் பண மோசம் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந் நட்சத்திரத்தில் பிறந்து சதுர்த்தி திதியில் பிறந்த நண்பர்கள் மட்டும் தங்கள் பிறந்த நட்சத்திரம் அல்லது திதியன்று ஸ்ரீ வாஞ்சியம் சென்று அங்குள்ள எமலிங்க ராஜாவிற்கு சிறப்பு பிராத்தனை செய்து தங்கள் வாழ்க்கைக்கு மங்களகரமான மிகப்பெரிய நன்மைகளை அடைவது நிச்சயம். இந் நட்சத்திரகாரர்கள் அனைவரும் ஒரு முறை சென்று வணங்க வேண்டிய ஸ்தலம்.
பரிகாரங்கள்
இளம்பூளை ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், ஆலங்குடி அஞ்சல் வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் -612801.
செல்லும் வழி
குடந்தை நீடங்கமங்கலம் சாலையில் கோயில் வெண்ணி, ஹரித்துவரமங்கலம், அவளிவநல்லூர் அருகில் உள்ள தலங்கள்.
கோவில் திறந்திருக்கும் நேரம்.
ஏலவார் குழலி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் 06.00-௦1.00 04.00-09.00
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்