மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் 1,2,3 பாதங்கள்
மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் 1,2,3 பாதங்கள்
சகல சாஸ்திரங்களை
அறிய விரும்பம் உடையவரும், அகங்கார பேச்சு கொண்டவரும், கர்வம் உடையவரும்,
தைர்யசாலியும், சுறுசுறுப்பு குணம் உடையவரும், தன் சுய செயல் திட்டங்களுக்கு,
துவக்கத்தில் குழப்ப நிலையும், பிறர் உதவி கொண்டு செயல் ஆற்றுபவரும் தன் சுய
நலத்திற்கு எச் செயலையும் செய்ய முயற்சிப்பவருமான தங்கள் கடந்து வந்த பாதை 2
ஆண்டுகளுக்கு முன்பாக தன் நிலை உணராது வாய்ப்புகளும் அதிகாரங்களும் ஏற்பட்டதின்
காரணமாக பல விஷயங்களின் தலையிட்டு வெற்றியும் பெற்றீர்கள். சனி பகவான் விருச்சிக
ராசிக்கு மாறிய பிறகு ராகுவின் முழு சுய பலத்தின் காரணமாக தந்தை வழி உறவுகளில்
இழப்புகள் நஷ்டங்கள் ஏற்பட்டது. தொழிலில் மந்த நிலையும், தங்களுடைய வாக்கு
சதுர்யத்தினால் தோல்வியும், காரியத்தடைகளும் ஏற்பட்டது. இந்த செவ்வாய் சனி
சேர்க்கையானது தங்கள் ராசிக்கு 11 ம் இடத்தில் கூடுவதின் காரணமாகவும், தசமி
திதியில் பிறந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மூத்த சகோதர சகோதரிகள் மூலமாக
வம்புகளும், வழக்குகளும் தாயாருடைய மருத்துவச் செலவினங்களும், முறை தவறிய நட்பு
பாராட்டிய நபர்கள் சங்கடங்களையும், அவமானங்களையும், சந்திப்பீர்கள். தசமி திதியில்
பிறந்தவர்கள் இக்காலகட்டத்தில் பூமியினால் லாபமும் புதிய பதவிகள் கிடைக்க
பெறுவீர்கள். உடல் நிலை ஆரோக்யத்தில் நரம்பு சம்பந்தப்பட்ட நுரையீரல்,
சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தற்காத்து கொள்வது நல்லது. இந்நட்சத்திரத்தில்
பிறந்து கிருத்திகை திதி, சஷ்டி திதி, நவமி திதி பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த
ஆதாயமளிக்கக் கூடிய செய்தி கிடைக்கும்.சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பணமுடக்கம்
நீங்குவதற்கு , குடும்ப சுழலில் ஏற்பட்டு இருக்கின்ற விரக்திகள்
மாறுவதற்கும் எமகண்ட நேரத்தில் இலுப்பை எண்ணெய் விநாயகருக்கு அருகம்புல் மாலை
அணிவித்து சர்க்கரை நெய் வேத்தியம் வைத்து விளக்கேற்றி வழிபட்டால் இந்த சனி
செவ்வாய் செர்க்கைகுரிய காலகட்டத்தில் தங்கள் வார்த்தைக்கு மதிப்பு ஏற்படுவதை
காண்பீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும்,
கிடைக்கப் பெறுவீர்கள். விடுபட்ட உறவுகள் மலரும்.
பரிகாரங்கள்
குற்றாலம்
குற்றலநாதர் திருக்கோவில், குற்றாலம் அஞ்சல் திருநெல்வேலி மாவட்டம் – 627802 தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே உள்ளது. சென்னை
கொல்லம், மெயில், சென்னை செங்கோட்டை பாசஞ்சர், செங்கோட்டையில் இருந்து
பேருந்துகளில் செல்லவும். மதுரை திருநெல்வேலியில் இருந்து செல்லலாம்.
குற்றாலத்தில் இருந்தும் செல்லலாம். குற்றாலத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில்
தென்மலை சுற்றுலா தலம் உள்ளது. குழல்வாய்மொழியம்மை உடனுறை குற்றலநாதர் 06.00 –
12.00 04.30-08.00
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும். myathistam@gmail.com
Comments
Post a Comment