கடக ராசி பூசம் நட்சத்திரம்



கடக ராசி பூசம் நட்சத்திரம்
தெய்விக பக்தியும் தார்மிக சிந்தனையும் சண்டைஇடுவதில், பிரியமும், கல்வி ஞானம் பெற்றவர். எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்கும் ஆற்றலும் தன் நிலை உணராமல் பிறர்க்கு உதவி செய்யும் குணம் கொண்ட தங்களுக்கு இதுவரை கடந்து வந்த பாதை இடம் மாற்றம் கடன் தொல்லை சிலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள், தொழில் முடக்கதுடன், தொழில் மாற்ற சிந்தனையுடன் எச் செயலும் செய்ய முடியாமல் சூழ்நிலை கருதி அமைதி காத்துக் கொண்டு பிறரின் வஞ்சனையான வார்த்தையைக் கேட்டு மன துன்பத்திற்கு ஆளான தங்களுக்கு சனி, செவ்வாய் சேர்க்கை பலன்கள் தங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கு புதியதோர் நண்பனின் துணையோடு தீடீர் பணம் வரவுகள் மூலம் வெற்றி பெறுவீர்கள். தங்களின் தாயாருக்கு மருத்துவ செலவீனங்கள் செய்ய நேரிடலாம். தங்களுடைய குழந்தைகளின் ஒருவர் தொழில் நிர்பந்தமாக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு வசிக்க நேரிடலாம். கடந்த காலங்களில் தந்தை வழி உறவுகளில் ஏற்பட்ட பகைமை மறையும். ஒரு சிலருக்கு விலையுயர்ந்த பொருள் கண்டெடுக்கப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை வேண்டி காத்திருக்கும் தம்பதியினருக்கு புதிய நபரின் மருத்துவ, ஆன்மிக ஆலோசனையின் பெயரில் குழந்தை பாக்கியம் கிட்டும். குறிப்பாக தசமி திதியில் பிறந்தவர்கள் வாரிசு உருவாகும். அரசியல் அரங்கில் தனிமை நபர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். மேலும் பிரதிமை திருதிகை திதி, துவரதேசி யில் பிறந்தவர்களுக்கு தங்களின் எதிர்த்தவர்களை தங்களை முன்பொழிவு செய்யும் படியாக சுழல் ஏற்படும். பெண் வழி நம்பர்களிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை.
பெண்கள்
இக் கால கட்டங்களின் வார்த்தையில் நிதானம் தேவை. தந்தை வழி உறவினர்கள் கருத்துக் கிணங்க நிர்பந்தமான முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை ஏற்படும் கவனம் தேவை.
பரிகாரங்கள்
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவில்,
சட்டை நாதசுவாமி, சீர்காழி அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் - 609110

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்