மேஷம் பரணி
பரணி நட்சத்திர காரர்களுக்கு 06.03.2016
முதல் 20.06.2016 வரை உள்ள காலக்கட்டங்களில், வண்டி
வாகனங்களில் தலைக் கவசம் அணித்து செல்வது நல்லது. பிறரிடம் வாக்குவாதம் செய்வதைத்
தவிர்க்க வேண்டும். தொழில் நிலையங்களில் சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். ஒரு பணலாபம்
கிடைக்கும். கேது திசை, புத்தி, செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி, சனி திசை, சனி
புத்தி, நடப்பவர்கள் மட்டும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பரணி
நட்சத்திரத்தில் கிருத்திகை திதி, சஷ்டி
திதி, நவமி திதி, திரியோதசி திதி, யில் பிறந்த நபர்களுக்கு திடீர் தனயோகம்
கிடைக்கும். பெண் வலி பூர்விக சொத்துகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில்
நிலையங்களில், ரியல் எஸ்டேட், வீடு அதே சமயத்தில் சட்ட நடைமுறைகளில் கவனமாக இருக்க
வேண்டும். ஒரு சிலருக்கு எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு மருத்துவம் பார்க்க
வேண்டிய நிர்பந்தங்களை ஏற்படும்.
பெண்கள்
கேது
திசை, கேது புத்தி, செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி, கர்ப்பிணிப் பெண்களும் மிக
கவனத்தோடு செயல்பட வேண்டும். இல்லத்தில் பணமுடக்கம், வார்த்தை யுத்தங்கள் வந்து
நீங்கும். தாய் வழி உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள். கர்ப்பிணிப்பெண்கள் மிக
அவசியமாக அருகில் உள்ள சித்த ஜீவ ஆலயங்களில் சென்று வழிபடும், அன்னதானமும் செய்ய
தீமைகள் குறைந்து நன்மைகள் கிடைக்கும்.
Comments
Post a Comment