சிம்ம ராசி உத்ரம் நட்சத்திரம் 1 ம் பாதம்
சிம்ம ராசி உத்ரம் நட்சத்திரம் 1 ம் பாதம்
நண்பர்களுடன் நட்பு கொள்பவரும் இனிய வார்த்தை கூறுபவரும்
பிறர் செய்த நன்றியை மறக்கதவரும் தைரியசாலியம் எடுத்த செயலை விரைவாக முடிவெடுக்க
எண்ணுபவரும் தன் சுய காரியங்களை முடிவு பெறும் சமயத்தில் மனக் குழப்பங்கள், மன சஞ்சலங்களுடன்
மற்றவர்கள் உதவியுடன் அந்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் உள்ளவருமான தங்கள் கடந்த
கால நிகழ்வுகள் தங்களுடைய வார்த்தை காரணமாக பல்வேறு சங்கடங்களை
சந்தித்தீருபீர்கள். குடும்ப ஸ்தானத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு ஒரு சிலருக்கு
இடம் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு சிலருக்கு குழந்தைகள் வழியில் வருத்தமும்
அவமானங்களும் ஏற்பட்டிருக்கலாம். ஒரு சிலருக்கு தொழிலில் தன சக்திக்கு மீறிய
செயல்களில் இறங்கிய பின் மனவருத்தம் ஏற்படும் சூழலும் ஏற்படலாம். தங்களுடைய மேல்
வயிற்று பகுதியில் மச்சமும் அல்லது தழும்புகளும் காணப்படும். இந்த செவ்வாய், சனி
சேர்க்கையின் பலன்கள் பற்றிய விபரம். தங்களின் தாய்மாமன் வழியில் மன சங்கடங்கள்
ஏற்படலாம். கடன்கள் கட்டுக்குள் அடங்கும், குறையும். குறிப்பாக திருத்திகை, சஷ்டி,
நவமி, திரயோதசி திதியில் பிறந்தவர்களுக்கு மிகப் பெரிய ராஜயோகம் கிடைக்கப்படும். தந்தை
வழியில் உதவிகளும், வரவுகளும் பூர்விகச் சொத்துகள் மூலமாக நன்மையும் கடந்த ஆண்டில்
ஏற்பட்ட பண முடக்கம் நீங்கி சரளமாக பணப் புழக்கம் ஏற்படும். ஒரு சிலருக்கு தங்கள்
சமுகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். தங்களுடைய தொழில் பங்குதாரர்கள் இடையே
எச்சரிக்கையோடு பழகவும். கட்டுமான தொழில், (வீடு கட்டுதல், ரியல் எஸ்டேட்) புதிய
ஒப்பந்தங்கள் ஏப்ரல் 2வது வாரத்தில் ஏற்படும். தொழில் நிர்ப்பந்தமாக புதிய கடன்
பெறுவதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள். ஆண் என்றால் பெண், பெண் என்றால் ஆண், உதவி பெற்று அக்காரியத்தை
வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஆண் குழந்தை
பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். குழந்தை பிறந்த பிறகு தந்தையில் நிலைப்பாட்டில்
சற்று பலவீனம் ஏற்பட்டு சங்கடங்கள் மாற்று வழியில் பயணத்தை மேற்கொள்வர்.
பரிகாரங்கள்
கொடிமாடச்செங்குன்றூர், திருச்செங்கோடு,
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு, மற்றும் வட்டம். நாமக்கல்
மாவட்டம் 637211
Comments
Post a Comment