மிதுன ராசி மிருகசிரிஷம் நட்சத்திர 3, 4 பாதங்கள்
பிறரின் மனதை புரிந்து நடந்து கொள்பவரும் பிடிவாத குணம் கொண்டவரும் தெய்வீக
அனுஸ்தானங்களில் பற்று கொண்டவரும் கொண்ட மிதுனராசியில் பிறந்த தங்களுக்கு இக்காலக்கட்டத்தில்
தன்னிலை உணர்ந்து விபரீத ராஜயோகம் போன்ற உன்னதமான தீடீர் லாபங்களையும்
மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். சிலருக்கு உயில் போன்ற சாசனம் மற்றும் பூர்விக
சொத்துகள் மூலமாக ஒரு உன்னதமான பயனை அடையப் போகின்றீர்கள். மிகவும் துடுக்காகவும்
உறுத்தாகவும் முரண்பாடான குணங்களுடன் செயல்படுகின்ற இளைய சகோதர சகோதரிகளின் செயல்பாடுகள்
தங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் அல்லது அவர்களின் பொறுப்பு காரணமாக சிறு
நஷ்டத்தை ஏற்படுத்தலாம். தங்களுடைய பெண் வாரிசுகள் உடல் நலக் குறைவு காரணமாக
மருத்துவச் செலவு ஏற்படலாம். தங்களுடைய கணவன் மனைவி ஸ்தானத்தில் சில குழப்ப
நிலைகளும், நஷ்டங்களும் பிரியாத புதிர்வுகள் காரணமாக பிரிவுகள் கூட ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது, உடன் பணியாற்றுவர், தொழில் பங்குதாரர்கள், குறைகளைப் பெரிது படுத்தத்தாமல்
இருந்ததால் பிரிவினையை தவிர்க்கலாம். தங்களுடைய உடல் ஆரோக்யத்தில் மிகுந்த கவனம்
செல்லுத வேண்டிய காலம் இது. வயிற்றுப் பகுதிகளிலும் ஒரு சிலருக்கு ரத்த
சம்பந்தப்பட்ட உபாதைகளும் காய வடுக்களும் ஏற்பட சாதியக் கூறுகள் இருக்கின்றன.
தங்களுக்கு கிடைக்கக்கூடிய அங்கீகாரங்களும், பாராட்டுக்களும்
தட்டிப்பறிக்கப்படலாம். கவனம் தேவை.
சதுர்த்தி திதி யில் பிறந்த நண்பர்களுக்கு
ஆன்மிக தொடர்புகள் ஏற்படும். ஒரு சிலரின் ரகசிய முறைசாரா நட்புகள் மூலம்
பிரச்சினைகல் ஏற்பட்டு பிரிவு ஏற்படும்.
பரிகாரஸ்தலங்கள்
திருக்கடம்பூர், மேலக்கடம்பூர், அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் மேலக்கடம்பூர்
அஞ்சல் வழி, ரெட்டியூர், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம் 608304. ஒமாம்புளியூரிலிருந்து
காட்டுமன்னார்குடி சாலையில் மோவூர் ஆயங்குடி எய்யலூர் செல்லலாம். சிதம்பரம்
காட்டுமன்னார்குடி எய்யலூர் சாலையில் கீழக்கடம்பூர் 2 கி.மீ. தூரம் மேலக்கடம்பூர்
6 கி.மீ.தூரத்தில் எய்யலூர் ராமாயணத்துடன் தொடர்புடைய தலம். ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் உடனுறை
மங்களாம்பிகை கோவில் உள்ளது. இராமன் சீதையைத் தேடி வந்த பொது கொள்ளிடத்தில்
வெள்ளத்தில் தன் அம்பு எய்து கட்டுப்படுத்திய எய்தலூரே, எய்யலூரானது.
ஸ்தல வரலாறு
செவ்வாய் தோஷ நிவர்த்தி
தலம், கடன் தீர்க்கும் இடம்பநாதர், பிரதோஷத்தில் மட்டும் தரிசனம் தரும் ரிஷப தாண்டவமூர்த்தி
இந்திரன் வழிபட்டு அமுத்கலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற ஸ்தலம்,
விநாயகரை வேண்ட மறந்து இந்திரன் தன முதிய தாய்க்காக கருவறையை குதிரைகலப் பூட்டி
இழுக்க விநாயகர் ஊன்றிய இடம் அங்கராகன் வழிபட்ட தலம்.
வித்யஜோதி நாயகி உடனுறை
அமிர்தகடேஸ்வரர் 04144-264639, 264642
தங்களின் சுய ஜாதகத்தை
பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment