விருச்சிகராசி விசாகம், அனுஷம், கேட்டை, 4 ம் பாதம்



விருச்சிகராசி விசாகம், அனுஷம், கேட்டை, 4 ம் பாதம்
தான தர்மம் செய்யும் குணமும் பேசுவதில் சாமர்த்தியமும் தெய்வ பக்தியும் எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும் மிகுந்த மன சஞ்சலம் உடையவரும் தங்கள் இதுவரை கடந்து வந்தவை தாய்வழி உறவுகள் நண்பர்கள் மூலமாக பண விரயங்களும் மன சங்கடங்களும் அடைந்து இருப்பீர்கள். ஒரு சிலர் பெற்ற கல்வி மற்றும் அனுபவத்தில் காரணமாக வெளிநாடு சென்று பொருள் ஈட்டி இருப்பீர்கள். கடந்து 2 மாத காலங்களாக தங்களை உறங்க விடாமல் பல காரிய எண்ணங்கள் தாங்கள் கூறிய வார்த்தைகளால் பின் விளைவுகளும் வாகனம் ரீதியாக செலவினங்களும் செய்து வந்துள்ளிர்கள். ஒரு சிலர் மனைவி மூலம் உதவி பெற்று இருப்பீர்கள். இனி வருகின்ற செவ்வாய் சனி சேர்க்கையானது மிகவும் கவனமுடன் எச்சரிக்கையாக கடந்து செல்ல வேண்டிய காலங்கள் ஆகும். தங்கள் ராசியிலேயே தங்கள் ராசி நாதனும் தங்கள் நட்சத்திரத்திற்கு யோகத்தை அளிக்க கூடிய வருமான செவ்வாய் பகவான் ஆட்சி வக்கிர நீசம், என்ற நிலையில் அவர் கோச்சார சஞ்சாரம் காரணமாக தங்கள் ராசிக்கு 3, 4 க்குரியவரும் தங்கள் ராசிநாதருக்கு ஜென்ம பகைவன் என்ற சனி பகவான் அதே ராசியில் இணைந்து வக்கிரமாகவும் சஞ்சாரம் செய்ய உள்ளார். இக்காலகட்டத்தில் தாங்கள் புதிய முயற்சிகள் ஏதும் செய்ய கூடாது. புதிய நண்பர்கள் மூலமாக பணவரவு வர உள்ளது. அந்த பண வரவிற்காக பல முறை யோசித்தே பெற வேண்டும்.
தங்களுடைய மனைவி, கணவன் உடல் நிலையில் மிகுந்த கவனம் உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ரசாயனம், மதுவகைகள், மருந்து வகைகள் விவசாய பூச்சிமருந்து போன்ற துறையில் உள்ளோர்க்கு புதிய கண்டுபிடிப்புகள் மூலமாக நன்மையும், புதிய வியாபார வாய்ப்புகள் மூலமாக லாபமும் கிடைக்கபெருவீர்கள். தந்தை வழி பூர்விக சொத்துகள் தொடர்பான விஷயங்கள் நல்ல ஒரு முடிவுக்கு வரும் லாபமும் நன்மையும் ஏற்படும். குறிப்பாக 06.03.2016 முதல் 11.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசியைச் சேர்ந்த 3 நட்சத்திரக்காரர் களுக்கு மட்டுமல்லாது உலக அளவிலேயே  சில முக்கிய விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெறு உள்ளது. எச்சரிக்கை தேவை. இக்காலகட்டத்தில் கடல் சீற்றமும் ஏற்படும். தங்களுடைய ராசி நட்சத்திரத்திற்குரிய வழிபாடுகள் பின்பற்ற நன்மை அடைவீர்கள். கும்பகோணம் அருகிலுள்ள தராசுரம் அங்குள்ள சிவபெருமானையும் துர்கபரமேஸ்வரி ஆலயமும் சென்று சிவப்பு வஸ்திரத்தால் தயிர் அன்னதானம் வழங்க நன்மைகள் பெருகி தீமைகள் குறையும்.

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்