கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம்



கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம்
முகபகுதியில் மச்சம் தழும்பும் கூடிய வரும் தன காரியங்களை எப்பாடு பட்டும் நிறைவேற்றும் தன்மை கொண்டவரும் கல்வியில் பற்றும் உள்ளவருமான தங்களுக்கு ஸ்ரீ சனிபகவான் ஸ்ரீ செவ்வாய் பகவான் சேர்க்கை பழங்கள் சூரிய நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு தங்கள் ராசி மேஷராசிக்கு 8ல்  இணைந்து செயல்படுகிறார்கள். மாசி 23 காலம் வரை தடைதாமதம் இன்றி சிறப்பாக செயல்படுவீர்கள். மாசி 23ம் தேதிக்குப் பிறகு தொழில் கசப்பான பிரச்சனைகளை திறமையாக போராடி வெற்றி பெறுவீர்கள். சில பூர்விக சொத்தை மாற்றி புதிய லாபம் பெறுவீர்கள். தந்தை வழியில் செலவினங்கள் ஏற்படக்கூடும். ராகுதிசை, சனிதிசை நடப்பவர்கள் இழப்புகளை சந்திப்பீர்கள். இகாலகட்டங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அது பின் நாளில் பயனுள்ளதாக அமையும். புண்ணிய யோகம் உள்ளவர்களுக்கு அரசியல் எதிர்பாராத விதமாக தலைமை தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஒரு சிலர் தீடிர் வேட்பாளர் ஆகக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும். மிகவும் கவனமுடன் தங்கள் எண்ணங்களை வெளியீடு செயயாமல் அமைதி காக்க மேலும் நலம் உண்டாகும். அரசியல் பதவிகள் கிடைக்க அருகில் உள்ள ஜீவசமாதிகளில் சென்று, சாதுகளுக்கு அன்னதானமும் காவி உடையும் தானம் செய்து  பெண் தெய்வம் மீனாக்ஷியின் உக்கிர உருவம் கண்ணகியாம், கண்ணகி அமர்ந்த இடம் மதுரைக் காளியம்மன் ஆக அமர்ந்த இடம் திருச்சி அருகில் திருவாச்சியூர் பௌர்ணமி அன்று சிறு பெண்  குழந்தைகளுக்கு ஆடைதானமும், வளையல் தானமும், இனிப்புப் பண்டங்கள் தானமும் செய்ய நன்மை உண்டாகும்.
பெண்கள்
கடந்த காலங்களில் குழந்தை கருச்சிதைவு ஏற்பட்டு வருத்தம் அடைந்தவர்களுக்கு குழந்தை பிறக்கு வாய்ப்பு கிடைக்கும். கணவர் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே வார்த்தை கவனம் தேவை. சிலருடைய கணவன்மார்கள் தன் சுய தேவைக்காக மனக் கஷ்டத்தை ஏற்படுத்துவார்கள். பொறுமை மிகும் அவசியம் தேவை. முன்பு குறிபிட்ட பரிகார ஸ்தலத்திற்கு சென்று சிறப்பு பெறுவீர்கள்.

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்