மீனராசி உத்திரட்டாதி நட்சசத்திரம்



மீனராசி உத்திரட்டாதி நட்சசத்திரம்
கல்வியில் சிறந்த வரும் கருத்துடன் தன் காரியத்தை சாதிக்கும் வல்லமை கொண்டவரும். தெய்வீக வழிபாடுகளில் விருப்பம் கொண்டவரும் உடலில் அதிக ரோமம் கொண்டவரும், நண்பர்களிடம் வார்த்தைப் போர் புரியும் எண்ணம் கொண்டவரும் எச் செயலிலும் இரட்டை மனம் கொண்டவரும் தங்கள் இதுவரை கடந்து வந்த பாதை கடந்து 1 ½ வருட காலங்களாக தங்களுடைய பிடிவாத குணங்களுடன் பல முயற்சிகளுடனும் நன்மை தீமைகளை யோசிக்காது பல காரியங்களை முடிக்க முடிக்க முற்பட்டவரும், சினம் கொண்டு, தடித்த வார்த்தைகளினால் பல சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குழைந்திருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பல்வேறு சிரமங்களை அடைந்து இருப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலமாக கடனாகவே பணம் பெற்று இருப்பீர்கள்.. குழந்தைகள் நலன் கருதி செலவினங்கள் ஏற்பட்டு இருக்கும். மனைவி உடல் நிலையில் குறை அடைந்திருக்கலாம் . தொழில் வேலைவாய்ப்புகளில் உன்னத நிலை காணப் பட்டு இருக்கும்.
இந்த சனி, செவ்வாய் சேர்க்கைக்கான பலன்கள் பற்றி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் தங்கள் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சனி பகவான்இருக்கும் இடத்தை வருடத்திற்கு 1 ½ மாதங்கள்கடக்கும் காலங்களில் குறிப்புடன் மனதில் பதியும்படி சில சங்கடமான சுழல்கள் ஏற்படுத்தி சென்றதை அனுபவித்து இருப்பீர்கள். சற்று பின் நோக்கி சென்று ஆராய்ந்ததால் இதன் உண்மை உங்களுக்கு புரியும். தற்பொழுது விருச்சிக பகவானினால் உள்ள ஸ்ரீ சனி பகவன் வக்கிரம் பெற்று செவ்வாய் பகவானினால் 6 ½ மாதங்கள் இணைந்து செயல்படுகிறார்கள். தங்களுடைய நட்சத்திர நாயகன் சனி பகவான், செவ்வாயுடன் இணைவதும் செவ்வாய் புத்தி, சனி புத்தி நடைபெறும் நபர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுப்பது தவிர்ப்பது நல்லது. தங்களுக்கு கோபம் மூட்டுகின்ற செயல்கள் கண்ணுக்கு தெரியும். எனவே கோபத்தை தவிர்ப்பது நல்லது. மூச்சு சம்பந்தப்பட்ட, எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட, நோய்கள் ஏற்படலாம். அரசியல் சூழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் எதிரிகள் மூலமாக பல நன்மைகளை அடைவீர்கள். தங்களுடைய கருத்துகளை வெளியிடாமல் இருப்பது நல்லது. தசமி திதி யில் பிறந்தவர்களுக்கு மட்டும் ஒரு உன்னதமான லாபகரமான பணவரவுகளோ புதிய ஒப்பந்தங்களோ ஏற்படலாம். அதே சமயத்தில் சுப விரயங்கள் ஏற்படலாம்.. (வீடு கட்டுவது, அன்ன தானம் மேற்கொள்வது) வயிற்றுப் பகுதியில் ஆண்/பெண் இருபாலர்க்கும் மருத்துவ செலவினங்கள் ஏற்படலாம். ஒரு சில பெண்களுடைய கரு களைப்பு, கரு இழப்பு போன்ற சங்கடம் ஏற்படலாம். இந் நட்சத்திரத்தில் பிறந்த கலைஞர்கள், சினிமா நட்சத்திரங்கள் இக்கால கட்டத்தில் கிடைக்கின்ற பலன்கள் கிடைக்கும்.
பரிகாரங்கள்
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோவில் மயிலாடுதுறை அஞ்சல், மயிலாடுதுறை மாவட்டம், நாகை. 609001. சென்னை திருச்சி இராமேஸ்வரம் இருப்பு பாதை தலத்தில் ஒரு பகுதியில்தருமை ஆதினம் உள்ளது. தருமை ஆதின வள்ளலார் கோயில் எனப்படும். மேத தக்ஷிணாமூர்த்தி குரு தலம் உள்ளது. மேலும் சுவாமி ஸ்ரீ வதான்யேஸ்வரர் செருக்குற்ற ரிஷப தேவருக்கு ஞான உபதேசம் அளித்தவர் இந்த தக்ஷிணாமூர்த்தி சப்த மாதர்கள், சாமுண்டி, கணவர், அகத்தியர், பூஜிதத்தி கோவிலை 24 பிரதக்ஷணம் செய்ய மனோபீஷ்டத்தை அடைகிறார்கள்.
அபயாம்பிகை உடனுறை. மயூரநாதர் 06.00-12.30 04.00-09.00 வெள்ளிக்கிழமை இரவு  10.30
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்