பூரம் நட்சச்திரம்
பூரம் நட்சச்திரம்
புத்தி
சாதுர்யமும், வியாபார எண்ணங்கள் மேல் வயிற்றுப் பகுதியில் மச்சமும் வடுவும்
இருக்கப் பெற்றவரும். கலைநயத்துடன் கூடிய வரும் மிடுக்கான ஆடைகள் அணிபவரும் ஆன
தங்களுக்கு இந்த சனி செவ்வாய் சேர்க்கைக்குரிய பழங்கள் பார்பதற்கு முன்னால் கடந்து
வந்த காலங்கள் பற்றி 1 ½ வருட
காலத்திற்கு முன்பு கேட்ட இடத்தில் பணமும் பொருளும் கிடைத்தது. கடனைக் கொண்டு கடனை
அடித்தீர்கள். வார்த்தை ஜாலத்தினால் பல புதிய முயற்சிகளை எடுத்தீர்கள் அதில்
பலவற்றில் வெற்றிகளை பெற்றீர்கள். வெற்றி பெற்ற பொன்னும் பொருள்களையும் தவறான
பாதையில் முதலீடு செய்தீர்கள். வேகமான எண்ணமும் செயலும் பின்னடைவு ஏற்பட்டது. தன்
இருப்பிடத்தை மாற்றி அமைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. குழந்தையின் பொருட்டு
சங்கடங்கள், அவமானம் சந்திதீர்கள். இது கடந்து வந்த பாதையாகும். இனி வரும்
காலங்களில் நடப்பவைகளை சிந்திப்போம். எந்த சனி செவ்வாய் சேர்க்கை பல வகைகளில்
மாற்றி அமைக்க போகின்றது. புதிய பங்குதாரர் வந்து இணைவார்கள். புதிய வேலை
வாய்ப்பு கிட்டும். ஒரு சிலருக்கு தொழில்
நிரந்தரமாக நீண்ட தூர பயணங்கள் ஏற்படக் கூடும். பழைய நட்பு களுடன் பிரிவு ஏற்படும்.
ஒரு சிலருக்கு தாய் வழியில் பண வரவும் சொத்துக்களையும் கிடக்க பெறுவீர்கள்.
சிலருடை தந்தைக்கு வைத்திய செலவு ஏற்படலாம். குறிப்பாக விஷசந்துகள் மூலமாக உடல்
ஆரோக்கிய மின்மை ஏற்படலாம். தொழில் நிமிர்த்தமாக வெளிநாடு செல்ல முயற்சி
செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருக்கின்ற
தோசமுள்ள ஜாதக நண்பர்களுக்கு இந்த சமயத்தில் திருமணம் போன்ற சுப சம்பவங்கள்
ஏற்படலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம்
இன்றி இருப்பவர்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். பிரதமை, கிருத்திகை, துவாதிசி
பிறந்த அன்பர்களுக்கு இக்காலக்கட்டத்தில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள்
காரணமாக மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பங்குனி மாதம் முதல் இரண்டு
வாரத்திற்குள்ளாக புதிய முறைசாரா நட்பு ஏற்படும். கவனம் தேவை. ஒரு சிலருக்கு பதவி
உயர்வு. அரசியல் நிலை, பதவிகள் எதிரிகளை சூழ்ச்சியால் தடை தாமதங்கள் ஏற்படும்.
பரிகாரங்கள்
கோவில் பெயரும்
முகவரியும்
திருநல்லூர்,
நல்லூர் பஞ்சவர்நேஷ்வர் திருக்கோவில் திருநல்லூர் கிராமம். அஞ்சல் வழி சுந்தரர்
பெருமாள் கோவில் வலங்கைமான் வட்டம், திருவரூர் மாவட்டம். 614208.
செல்லும் வழி
தஞ்சாவூர் கும்பகோணம்
பிரிகின்ற வலங்கைமான் செல்லும் சாலையில் 2 கி.மி. கும்பகோணத்தில் இருந்து 14, 29, 48, 51, பாபநாசம் செல்லும் பஸ் மார்க்கத்தில் 10 கி.மி. உள்ளது.
வாழப்பழக்கடை பஸ் நிறுத்தம். இறங்கி ஒரு கி.மி. சென்றால் ஊர் பாபநாசம்
திருக்கருக்காவூர் அருகில் உள்ள ஸ்தலங்கள் கும்பகோணம் தஞ்சாவூர் மார்க்கத்தில்
சுந்தரர் பெருமாள் கோவில் இருந்து வலப்புறம் 3 கி.மி. நல்லூர். மேலும் தொடர்புக்கு
9442156790.
தல வரலாறு
ஆதிசேடன் வாயுவார்
போட்டியில் இரண்டு சிகரங்களை பெயர்த்து நல்லூர் ஆவூரில் விடுத்தனன். அப்பருக்கு
திருவடி சூட்டியது. அமர்நீதி நாயனாரை குடும்பத்தோடு ஆட்கொண்டதும் இங்கே. வண்ணங்கள்
6 நாழிகைக்கு ஒரு முறை 5 வண்ணமாக மாறும். சுவாமி பிருங்க வண்டாக வழிபட்டதால்
மூலவரில் துளைகள், சுயம்பு, அகத்தியருக்கு திருமணகோலம் காட்டிய இடம். குந்தி
கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் போக்க இத் தீர்த்தத்தை 7 கடலாக பாவித்து மாசி மகத்தில்
ஸ்நானம் செய்த இடம். ஸ்ரிபம் மூலவர் அருகே அகத்தியர் கர்ப்பமாக உள்ளவர்கள். அஷ்ட
புஜ மகாளிக்கு படையலிட்டு வேண்டிக் கொள்கின்றனர். காளி கோவில் உள்ளது. உடல் பிணி
நீங்க 12 படித்துறையில் நீராடி 12 முறை வலம் வர வேண்டும். பழச்சாறு அபிசேகம்
சுவாமிக்கு உகந்தது. சடாரி சாற்றும் வழக்கம் உள்ளது. சப்த சாகர தீர்க்கம் உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை பலி பீடத்திற்கு அபிசேகம் ஆராதனை ஆராதனை உண்டு. தொடர்புக்கு
கிரிசுந்தரி உடனுறை பஞ்சவர்னேஸ்வரர். கல்யாண சுந்தரேஸ்வரர் கணநாதர். 08.00-01.00 04.30-08.00 தொடர்புக்கு 04374-312857
Comments
Post a Comment