மேஷ ராசி அசுவினி பலன்கள்




மேஷ ராசி அசுவினி பலன்கள்
, பரணி, கிருத்திகை – 1 ம் பாதம் பெயர் முதல் எழுத்துக்கள்
ச, சோ, சே, ல, லீ, நூ, ஆ உள்ளவர்களும் பெருந்தன்மையும் பிறர்க்கு சேவை செய்யும் எண்ணமும், முன்கோபமும், புத்திசாதுர்யமும், வாக்குசாதுர்யமும், ஆடம்பர பிரியருமான தாங்கள் கடந்த கலங்களில் திருமணம், கூட்டுத்தொழில் நடைப்பெற்றது. பலருக்கு மனைவி வழியில் பிரச்சினையும் செலவும் பங்குதாரர்களின் பிரிவும் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருக்கலாம். தங்களுடைய ராசிபாகவன் செவ்வாயும், ஸ்ரீ சனிபகவானும் இனைந்து ஆயுள் ஸ்தானத்தில் ஆயுள் தானதிபதி, ஆயுள் காரகன் 6 ½ மாதங்கள் இனைந்து செயல்படுகிறார்கள். இக்காலகட்டதில் புதிய தொழில் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். கோபதாபத்துடன் அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தந்தையின் பெயரால் செலவினங்கள் ஏற்படலாம். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று தொழிலை விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் மூலமாக லாபமும், நற்செய்தியும் கிடைக்கும். ரியல் எஸ்டேட் கட்டிடக்கலை மூலமாக மிகபெரிய லாபங்கள் கிடைக்கும். மேஷ ராசி தசமி திதியில் பிறந்த நபர்களுக்கு மட்டும் தொடர்ந்து இராஜயோகம் போன்ற உன்னதமான நல்ல பலன்களும், புதிய உறவுகளும் ஆன்மிக சான்றோர்களுடைய சந்திப்பும், வழக்குகளில் இருந்து விடுதலையும், சகோதரப் பகையும். ஒரு சிலர்க்கு தலையில் காயங்களும், வலது கால் பகுதியில் காயங்களும், தழும்புகளும் ஏற்படும். சுயஜாதகத்தை பரிசீலனை செய்து அதற்குரிய பரிகாரங்கள் செய்து வர இக்காலகட்டத்தை  கடந்து செல்லலாம். நிச்சியமாக ஒரு முறை 06.03.2016 முதல் 20.06.2016 க்குள்.

பரிகராஸ்தலம்
அமிர்தேஸ்வரி உடனுறை சந்திர மௌலீஸ்வரா, திருவக்கரை சந்திர மௌலீஸ்வர் வக்ர காளியம்மன் திருக்கோவில், திருவக்கரை வானூர் வட்டம், விழுப்புரம் – 604304.
ஸ்தல வரலாறு
பூமியில் புதைந்த மரங்கள் அதே தோற்றத்தில் கல்மரங்களாக உள்ளன. சிலிகா ஊடுருவி இங்கு மரங்கள் கற்களாகவும், நெய்வேலியில் உப்பு நீரில் புதைந்ததால், நிலக்கரியாகவும் மாறியது என்கிறது அறிவியல் சுக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலியகரை (சுற்றில் கல் பாரைகள்) உள்ள இடம். வக்ர இடம். வக்ர காளியம்மன் சிறப்பு பெருமாள் சந்நிதியும் உள்ளது.

குறிப்பு
திண்டிவனம் மயிலம் வானூர் வழி பாண்டி செல்லும் பாதையில் பெரும்பாக்கத்தில் பிரியும் கிளையில் 7 கி.மீ ஸ்ரீ சுக்ர காளியம்மன் தற்போது பிரசித்தமாக வழங்குகிறது வழியில் மயிலம் முருகன் கோவில் தரிசிக்கலாம். சென்டூர் பாதையில் பிரிந்து செல்க.

அமிர்தேஸ்வரி உடனுறை
சந்திர மௌலீஸ்வர்

காலை 6 மணி முதல் இரவு 8.30
செயல் அலுவர்
0413-2688949
0413-2680870

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்