கடக ராசி புனர்பூசம் 4 ம் பாதம்
கடக ராசி புனர்பூசம்
4 ம் பாதம்
நன்றி மறவாத குணம் தெளிவான பார்வையும் பிறர்க்கு நன்மை செய்யும் நோக்கமும் ஒரு
செயலின் இறுதி முடிவினை குறிப்பு உணர்ந்து கணிக்கும் வள்ளமையும் மனதால் கோழையுமான,
மிகுந்த அழகான உடல் அங்கமுடைய தங்கள் இதுவரைக் கடந்து வந்த பாதையில் தந்தை வழியில்
பொருள் ஈழப்பு, கடன், மனகஷ்டமும், தொழிலில் நிலையற்ற நன்மையும், மனைவி வழியில்
அவமானங்கள், இருப்பிடம், மாற்றமும் ஏற்பட்டு எதிகாலத்தை எதிர்கொள்ளும் தங்களுக்கு
சனி, செவ்வாய் சேர்க்கை அதிவக்கிர பலன் மிகுந்த நன்மைகளை தொழில் முறைகளில் அமைத்து
தரும். பூர்விக சொத்துகள் பற்றிய பிரச்சினை திறக்கப்படும். சிலர் தொழில்
நிர்பந்தமாக வெளிநாடு செல்ல அவசியம் ஏற்படும். கலைஞர்கள், இசை, நாடகம், சினிமா,
துறை சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகளும் , அதற்குரிய அங்கீகாரம் மகிழ்ச்சியும்
உண்டாகும். பங்குனி மதம் பிறந்த அன்பர்களுக்கு எலேக்ட்ரோநிக்கா துறை, தொழில் நுட்பம்
விஞ்ஞான துறையில் சிறப்பு பட்டங்களும் பெரிய நிர்வாகப் பதவிகளும் கிடைக்கும். அரசு
வழியில் எதிர்பாராத பல்வேறு நல்ல உதவியும் கிடைக்கும். தங்கள் பிறந்த நட்சத்திர
தன்று அருகில் உள்ள ஜீவ சமாதிக்கு சென்று வஸ்திர தானம் செய்தால் கண்டிப்பாக
இப்பலனை பெறுவீர்கள். பொது ஜன சேவை, அரசியல் செய்பவர்களுக்கு எதிர்பாராத சற்றும்
சிந்தனைக்கு உட்படாத புதிய வாய்ப்புகள் மலரும். அருகில் உள்ள மனநிலை
காப்பகங்களுக்கு சென்று அன்னதானம் செய்வதால் இப்பலனை விரைவில் அடைய வாய்ப்புகள்
கிட்டும்.
பெண்கள்
கருவுற்ற தாய்மார்கள் மனதையும், உடலையும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள
வேண்டும். மருத்துவரின் தொடர் ஆலோசனை நன்மை ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள்
படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். படித்த படிப்பு மறக்காமல் இருப்பதற்கு
ஸ்ரீ ஹயக்ரிவரை வணங்க வேண்டும். கடும் முயற்சி எடுத்து தேர்வுக்கு தயாராக
வேண்டும்.
பரிகாரங்கள்
மனைவி, கணவன் வழியில் ஏற்படக் கூடிய விருப்பத்தக்கதாக சம்பவங்கள் அடிப்படையில்
இந்த காலக்கட்டத்தில் எந்த ஒரு முக்கியங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்
திருவதிகை, பண்ருட்டி, திருவதிகை, வீரட்டேஸ்வரர் திருக்கோவில்,
திருவதிகை,, பண்ருட்டி அஞ்சல், கடலூர் மாவட்டம் 607106
Comments
Post a Comment