ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் 2 3 4 பாதங்கள்
ரிஷப ராசி
அழகான உடல் அமைப்பும் நயமாக பேசி தன் காரியத்தை
வெற்றி கொள்ளும் பொருள் வரவு ஈடும் திறமை உள்ளவரும் தனது 16 வயதிலே நினைவில் நிற்கும் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டவரும் அனைவரிடமும் பாசத்தோடு
நடந்து கொள்ளும் தன்மை உள்ளவரும் கார்த்திகை நட்சத்திரம் 2, 3 ரோகினி நட்சத்திரம் மிருகசிரிடம் 1, 3 பாதங்களில் உள்ள ரிஷப ராசி நபர்களுக்கு
கார்த்திகை நட்சத்திரம் 2
3 4 பாதங்கள்
மாசி 23ம் தேதி வரை
தங்களுக்கு மகிழ்ச்சியும், மரியாதையும் வந்து கொண்டே இருக்கும் புதிய வாகனம்
வாங்குவீர்கள். ஒரு சிலர் பழைய மனை வாங்குவீர்கள். இது போன்ற சுபவிரயங்கள்
நடைபெறும் மாசி 23ம் தேதிக்குப் பிறகு
உள்ள காலகட்டங்களில் போக்குவரத்தில் கவனம் தேவை. முகத்தில் காயத் தழும்புகள்
ஏற்படும். வாக்குவாதம் செய்தவதை தவிர்க்க வேண்டும். தங்கள் செய்கின்ற முயற்சிகள்
3ம் முறையில் தான் வெற்றி வழியில் செல்லும் விடாமுயற்சி தேவை. மனைவி மற்றும்
பங்குதாரர்கள் மூலம் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். 1௦ ல் கேது அமர்ந்திருக்கும்
காரணத்தினால் சுப பார்வை அற்ற நிலையில் பங்குனி மாதம் பெண்கள் மூலம் சங்கடங்களை சந்திப்பீர்கள்.
அதன் பின் புதிய நபர் தங்களை வழி நடத்தி செல்ல உதவி புரிவார். தங்களுடைய சுய
ஜாதகத்தை முழுமையாக பரிசீலனை செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள். பிரதோஷ
நாளில் வித்திய ஜோதி அமிர்தகடேஸ்வரர் சென்று வழிபட நன்மைகள் ஏற்படும்.
பெண்கள்
மென்மையும் கண்டிப்பும் உடைய நீங்கள் மிகவும்
பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டிய காலம் இது. தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை கூட
தடை தாமதங்கள் ஏற்பட்டுத்தான் கிடைக்கும். தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில்
புதிய உறவுகள் ஏற்படும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
நீண்ட காலமாக தாய் தந்தை சொத்துப் பிரச்சினை தீர்க்கப்படும் கணவரின் தொழிலில் வேலை
மாற்றங்கள் ஏற்படும். சிலர் வெளிநாடு செல்லலாம். ஒரு சிலருக்கு காலில்
மூட்டுபகுதியில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும். பிரதோஷ
நாட்களில்வித்யு ஜோதி நாயக உடனுறை அமிர்தகடேஸ்வரர் தரும் ரிஷிய தாண்டவ மூர்த்தி,
இந்திரன் வழிபட்டு அமுதகலசமும்,முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலம். விநாயகரை
வேண்ட மறந்து இந்திரன் தன் முதிய தாய்க்காக கருவறையே குதிரைகளைப் பூட்டி இழுக்க
விநாயகர் ஊன்றிய இடம். அங்காரன் வழிபட்ட தலம். ஓமாம்புலியூரிலிருந்து
காட்டுமன்னார்குடி சாலையில் மோவூர் ஆயங்குடி எய்யலூர் செல்லலாம். சிதம்பரம்
காட்டுமன்னார்குடி எய்யலூர் சாலையில் கீழக் கடம்பூர் 2 கி.மீ. தூரம் மேலக்
கடம்பூர் 6 கி.மீ. தூரத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய தலம். ஸ்ரீ
சொர்ணபுரீஷ்வரர். உடனுறை மங்களாம்பிகை கோயில் உள்ளது. ராமன் சீதையைத் தேடி வந்த
போது கொள்ளிடத்தின் வெள்ளத்தின் தன் அம்பு எய்து கட்டுபடுத்தியதே எய்தலுரே
எய்யளுரானது. 041-44264638
Comments
Post a Comment