உலகின் அதி முக்கிய அதிசிய நிகழ்வுகள்
உலகின் அதி முக்கிய அதிசிய நிகழ்வுகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியுட்டுள்ளோம். 2009 ல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடகராசியில் செவ்வாய் நீச ஆதிவக்ர பலன்கள் பற்றி வெளியீடு செய்தோம். தற்போது 27.02.2015 முதல் உலக சாஸ்திர பிரபஞ்ச நிகழ்வில் பூமி மற்றும் ரத்தகாரன், யுத்தக்காரன் “ஸ்ரீ செவ்வாய் பகவான் தனது சுய சஞ்சாரத்தில் ஒரு ராசியைக் கடக்க ஒன்றரை மாதங்கள் எடுத்துக் கொள்வார். அதிமுக்கிய நிகழ்வாக விருச்சிக ராசியில் 6 ½ மாதங்கள் சஞ்சாரம் செய்ய உள்ளார். அவர்களுடன் இனைந்து சூரியன் மைந்தனும் ஈஸ்வரன் பட்டம் பெற்ற வரும், ஆயுள் காரருமான நீதிமான் “ஸ்ரீ சனிபகவான் அவர்கள் விருச்சிக ராசியில் சஞ்சாரம் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீ சனிபகவான் ஸ்ரீ செவ்வாய் பகவானுடன் இனைந்து வக்கிரகதியாக செயல்படுகிறார். இந்த அதிமுக்கியத்துவம் பிரபஞ்ச களத்தில் ராகுபகவான் சிம்ம ராசியிலும் கேதுபகவான் கும்ப ராசியிலும் குருபகவான் கன்னி ராசி மற்றும் சிம்ம ராசியிலும் மாறி மாறி செயல்பட உள்ளார். இதனால் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றிய விரிவாகவும், தெளிவாகவும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகா...