• .               
  •  ஸ்ரீ சனிபகவான்  ஸ்ரீ செவ்வாய்  
  •  
  •  
  •  இனைந்து வக்கிரகதியாக செயல்படுகிறார்


  • ஓம் சிவமயம்
    ஸ்ரீ ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
    குரு சுக்ர சனிப்பயர்ச்ச ராகவே கேதவே நம
    என்னுள் குருவாய அமர்ந்து அருளாசி வழங்கி இதயத்தில் குடி கொண்டுள்ள ஈசனுக்கு முதல் வணக்கம்

    “உன்னுள் வந்தடைய ஞானத்தைக் கொண்டு மனிதகுலம் உய்விக்கும் வழிகளைக் கண்டறிந்த மக்களுக்கு அருள்வாயாக “
    -    மஹா சித்தர் “போகர்” அருள் உரைப்படியும் என் மீது அன்பு கொண்ட சித்தர்கள் ஆன்மிக சான்றோர்கள் வேண்டுகொளுக்க்கிணக்க
    உலகின் அதி முக்கிய  அதிசிய நிகழ்வுகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியுட்டுள்ளோம். 2009 ல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடகராசியில் செவ்வாய் நீச ஆதிவக்ர பலன்கள் பற்றி வெளியீடு செய்தோம். தற்போது 27.02.2015 முதல் உலக சாஸ்திர பிரபஞ்ச நிகழ்வில் பூமி மற்றும் ரத்தகாரன், யுத்தக்காரன் “ஸ்ரீ செவ்வாய் பகவான் தனது சுய சஞ்சாரத்தில் ஒரு ராசியைக் கடக்க ஒன்றரை மாதங்கள் எடுத்துக் கொள்வார். அதிமுக்கிய நிகழ்வாக விருச்சிக ராசியில் 6 ½ மாதங்கள் சஞ்சாரம் செய்ய உள்ளார். அவர்களுடன் இனைந்து சூரியன் மைந்தனும் ஈஸ்வரன் பட்டம் பெற்ற வரும், ஆயுள் காரருமான நீதிமான் “ஸ்ரீ சனிபகவான் அவர்கள் விருச்சிக ராசியில் சஞ்சாரம் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீ சனிபகவான் ஸ்ரீ செவ்வாய் பகவானுடன் இனைந்து வக்கிரகதியாக செயல்படுகிறார். இந்த அதிமுக்கியத்துவம் பிரபஞ்ச களத்தில் ராகுபகவான் சிம்ம ராசியிலும் கேதுபகவான் கும்ப ராசியிலும் குருபகவான் கன்னி ராசி மற்றும் சிம்ம ராசியிலும் மாறி மாறி செயல்பட உள்ளார். இதனால் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றிய விரிவாகவும், தெளிவாகவும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும் நட்சத்திர கோச்சர பலன், தாரபலன், சுபவர்க்க யோகா பலன், கிரக சூனியன் பலன், சித்தர்கள் அருளிய அதிசுட்சும மிகவும் பழமையான “வேதத்ரஈ” பயன்படுத்தி எல்லாம் வல்ல ஸ்ரீ பிரம்ம சக்தி அருளால் பலன்களை வழங்குகின்றோம்.

    இதன் மூலம் கிடைக்கின்ற புண்ணியங்களும் பேரும் புகழும் எனக்கு உதவிய இறை அருளுக்கும், சித்தர் மகான்களுக்கும், ஆத்மருப நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்.


    jq;fspd; Ra [hjfj;ij ghprPyid nra;J ghpfhuq;fis nra;a 9442156790 ,e;j ek;giu njhlHG nfhs;sTk
    கிரக பெயர்ச்சி எப்பொழுது எப்படி

    ஸ்ரீ செவ்வாய் பகவான் மாசிமாதம் 14 ம் தேதி பிப்ரவரி 27,2016 ல் விருச்சிக ராசியில் சஞ்சாரம் மேற்கொள்கிறார். சித்திரை 16ம் தேதி ஏப்ரல் 29, 2016ல் வக்கிரமாய் ஆனி 14ல் நிவர்த்தியாகி (ஜுன் 28) தொடர்ந்து விருச்சிக ராசியிலேயே செப்டம்பர் 3ம் தேதி வரை இருக்கிறார். இக்காலகட்டத்தில் ஸ்ரீ சனிபகவான் தொடர்ந்து விருச்சிக ராசியிலே சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். பங்குனி, மார்ச் 26, 2016 ல் வக்ரகதியாகிறார். தொடர்ந்து வக்ரகதியாகி ஆடி 27ல் ஆகஸ்ட் 11ம் தேதி வக்ர நிவர்த்தியாகி வருடம் முழுவதும் விருச்சிக ராசியிலேயே பயணத்தை மேற்கொள்கிறார். இரண்டு மிகப் பெரிய யுத்த கிரகங்கள், பகை கிரகம் இனைந்து 6 ½ மாத காலங்கள் உலக ஜீவன்கள் அனைவருக்கும், அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் பலன்கள் வழங்க  உள்ளார். இந்த அதிமுக்கிய சேர்க்கையைப் பற்றிய பலன்கள் எழுத உதவிய அருளாலர்க்கு நன்றி.

    உலகின் நடக்கும் நிகழ்வுகள்

    உலக அரங்கில் மிக அரிய பணிகளை மேற்கொள்ள ஒரு பெண் தலைமை ஏற்பார். மதத்தின் பெயரால் மக்களுக்கு அச்சம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மிக பெரிய நாடுகளுடைய இரகசியங்கள் திருடப்பட்டு வெளி வரும். மிகக் கொடுரமான வைரஸ் நோய்கள் பரவும். அதற்கு மிகுந்த மருந்துகள் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள பல தோல்விகளை சந்திப்பார்கள். 2017 ம் ஆண்டு அதற்காக மருந்துகள் வெளிவரும். ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உலகை அச்சுறுத்துவார்கள். தீவிரவாதிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மலைபகுதிகளிலும், பூமி அதிர்வு ஏற்பட்டு ஏற்பட்டு பொருள் இழப்பு, ஏற்படும். மிக முக்கிய நாடுகளில் தொழில் வளமிக்க நகரங்களில் மிகப் பெரிய பொருள் இழப்பு, உயிர் இழப்பு ஏற்படும். கடல் பகுதியில் நில அதிர்வு, இயற்கை சீற்றங்களின் காரணமாக கப்பல்கள் விபத்துகளை சந்திக்கலாம்

    இந்தியா
    இந்தியாவின் சுகந்திர ஜாதகத்தின் அடிப்படையில் ரிஷப இலக்கன், கடக ராசியில் சுகந்திரம் கிடைத்தது. சனி செவ்வாய் சேர்க்கையின் பலன்கள் இந்திய மக்களிடையே ஆன்மீக வளர்ச்சியே பெருக்கும். ஆன்மீக கோயில்கள் பற்றிய பிரச்சனைகள் ஏற்பட்டு சங்கடங்களை சமாளிக்க வேண்டி வரும். பொருளாதரத்தை முடக்கும் முயற்சியாக தீவிரவாதிகள் மிகப் பெரிய சதித்திட்டம் தீட்டி தாக்குதல்கள் நடத்துவார்கள். ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் நடைபெற வாய்ப்புகள் இருக்கின்றது. மிகுந்த எச்சரிக்கை தேவை. பூமியில் இருந்து மிகப் பெரிய கனிமவளங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்படும். வெளிநாட்டு மூலம் இந்தியாவில் இனைந்து செயல்படுகின்ற நிறுவனங்கள் பின்னடைவு பிரச்சனைகளை சந்திக்கும்.
  • jq;fspd; Ra [hjfj;ij ghprPyid nra;J ghpfhuq;fis nra;a 9442156790 ,e;j ek;giu njhlHG nfhs;sTk
    மேஷ ராசி பலன்கள்
    அசுவினி,
    உள்ளவர்களும் பெருந்தன்மையும் பிறர்க்கு சேவை செய்யும் எண்ணமும், முன்கோபமும், புத்திசாதுர்யமும், வாக்குசாதுர்யமும், ஆடம்பர பிரியருமான தாங்கள் கடந்த கலங்களில் திருமணம், கூட்டுத்தொழில் நடைப்பெற்றது. பலருக்கு மனைவி வழியில் பிரச்சினையும் செலவும் பங்குதாரர்களின் பிரிவும் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருக்கலாம். தங்களுடைய ராசிபாகவன் செவ்வாயும், ஸ்ரீ சனிபகவானும் இனைந்து ஆயுள் ஸ்தானத்தில் ஆயுள் தானதிபதி, ஆயுள் காரகன் 6 ½ மாதங்கள் இனைந்து செயல்படுகிறார்கள். இக்காலகட்டதில் புதிய தொழில் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். கோபதாபத்துடன் அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தந்தையின் பெயரால் செலவினங்கள் ஏற்படலாம். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று தொழிலை விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் மூலமாக லாபமும், நற்செய்தியும் கிடைக்கும். ரியல் எஸ்டேட் கட்டிடக்கலை மூலமாக மிகபெரிய லாபங்கள் கிடைக்கும். மேஷ ராசி தசமி திதியில் பிறந்த நபர்களுக்கு மட்டும் தொடர்ந்து இராஜயோகம் போன்ற உன்னதமான நல்ல பலன்களும், புதிய உறவுகளும் ஆன்மிக சான்றோர்களுடைய சந்திப்பும், வழக்குகளில் இருந்து விடுதலையும், சகோதரப் பகையும். ஒரு சிலர்க்கு தலையில் காயங்களும், வலது கால் பகுதியில் காயங்களும், தழும்புகளும் ஏற்படும். சுயஜாதகத்தை பரிசீலனை செய்து அதற்குரிய பரிகாரங்கள் செய்து வர இக்காலகட்டத்தை  கடந்து செல்லலாம். நிச்சியமாக ஒரு முறை 06.03.2016 முதல் 20.06.2016 க்குள்.

    பரிகராஸ்தலம்
    அமிர்தேஸ்வரி உடனுறை சந்திர மௌலீஸ்வரா, திருவக்கரை சந்திர மௌலீஸ்வர் வக்ர காளியம்மன் திருக்கோவில், திருவக்கரை வானூர் வட்டம், விழுப்புரம் – 604304.
    ஸ்தல வரலாறு
    பூமியில் புதைந்த மரங்கள் அதே தோற்றத்தில் கல்மரங்களாக உள்ளன. சிலிகா ஊடுருவி இங்கு மரங்கள் கற்களாகவும், நெய்வேலியில் உப்பு நீரில் புதைந்ததால், நிலக்கரியாகவும் மாறியது என்கிறது அறிவியல் சுக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலியகரை (சுற்றில் கல் பாரைகள்) உள்ள இடம். வக்ர இடம். வக்ர காளியம்மன் சிறப்பு பெருமாள் சந்நிதியும் உள்ளது.

    குறிப்பு
    திண்டிவனம் மயிலம் வானூர் வழி பாண்டி செல்லும் பாதையில் பெரும்பாக்கத்தில் பிரியும் கிளையில் 7 கி.மீ ஸ்ரீ சுக்ர காளியம்மன் தற்போது பிரசித்தமாக வழங்குகிறது வழியில் மயிலம் முருகன் கோவில் தரிசிக்கலாம். சென்டூர் பாதையில் பிரிந்து செல்க.

    அமிர்தேஸ்வரி உடனுறை
    சந்திர மௌலீஸ்வர்

    காலை 6 மணி முதல் இரவு 8.30
    செயல் அலுவர்
    0413-2688949

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்