மிக பெரிய நாடுகளுடைய இரகசியங்கள் திருடப்பட்டு வெளி வரும்.


சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும்                  அதி முக்கிய  அதிசிய நிகழ்வுகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள்வெளியுட்டு february month myathistam so to day news----------------------------------------------------


 யுத்த கிரகங்கள், பகை கிரகம் இனைந்து 6 ½ மாத காலங்கள் உலக ஜீவன்கள் மிக பெரிய நாடுகளுடைய இரகசியங்கள் திருடப்பட்டு வெளி வரும். மிகக் கொடுரமான வைரஸ் நோய்கள் பரவும். அதற்கு மிகுந்த மருந்துகள் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள பல தோல்விகளை சந்திப்பார்கள். 2017 ம் ஆண்டு அதற்காக மருந்துகள் வெளிவரும். ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உலகை அச்சுறுத்துவார்கள். http://www.myathistam.blogspot.in/2016/02/6.html  சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும்                  அதி முக்கிய  அதிசிய நிகழ்வுகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள்வெளியுட்டு                                        

news லண்டன், ஏப்ரல் 5- உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் முறைகேடான வழியில் பனாமா வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியம் அம்பலமாகி இருப்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி என்று இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன. http://www.vanakkammalaysia.com/entertainment/1237-2016-04-05-08-30-30

இந்தத் தகவல்கள் அடங்கிய ஆவணங்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்றுபனாமா ஆவணங்கள்என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளில் பனாமா மற்றும் தீவு நாடுகளில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பல ஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என வர்ணிக்கப்பட்டது.
ஐஸ்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதமர்கள், உக்ரைன் அதிபர், சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் ரஷிய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளர்கள், அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி, நடிகர்கள் அமிதாப் பச்சான், ஜேக்கி சான் மற்றும் அரசியல் தலைவர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.
இதேபோல் சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் ஆகியோரும் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது

http://www.bbc.com/tamil/global/2016/04/160405_china_panama    பனாமா ஆவணங்கள்: 'சீன இணைய தேடுதளத்தில் கிடைக்கவில்லை'

5 ஏப்ரல் 2016 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:30 ஜிஎம்டி
பனாமாவில் உள்ள மொஸ்ஸக் ஃபொன்சேக என்ற சட்ட நிறுவனத்திலிருந்து மில்லியன் கணக்கான ஆவணங்கள் கசிந்துள்ள நிலையில், உலகெங்கிலும் வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளனர்.
உலகின் செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் நாட்டுக்கு வெளியில் உள்ள நிறுவனங்களைப் பயன்படுத்தி, எவ்வாறு தங்களின் சொத்துக்களை பதுக்கிவைத்துள்ளனர் என்று அந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
இன்னாள் மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள் பலருக்கு, இந்த ஆவணங்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புபட்டுள்ளவர்களில், சீனாவின் அதிபர் க்ஷி ஜின்பிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் நெருங்கிய உறவினர்களும் உள்ளனர்.

இதனிடையே, சீனாவுக்குள் இந்த செய்தி பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு சீன அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீனாவின் மிகவும் பிரபலமான இணைய தேடுதளத்தில் பனாமா பேப்பர்ஸ் என்று எழுதினால், 'முடிவுகள் சீன சட்டத்தை மீறுவதாக' பதில் வருகின்றது………………………………………………………………………………………………………………………..உலகையே புரட்டிப்போடும் பனாமா ஆவணங்கள்!


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் பொன்சேக என்ற நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் கசியவிடப்பட்டன. இதனால் பணக்காரர்களும் பலமுள்ளவர்களும் தமது பணத்தைப் பதுக்குவதற்காக எப்படி இந்த வரிஏய்ப்பு நாட்டினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறியவந்துள்ளது.
மிகமிக இரகசியமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மொஸாக் பொன்சேக உலகளவில் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளை மிகவும் இரகசியமாக நடாத்தும் பெரும் நிறுவனங்களில் ஒன்று. உலகிலே சட்டவிரோதமாகப் பணம் சேர்ப்பவர்களுக்கும், வரி கட்டாமல் தமது பணத்தைச் சேமித்து வைப்பவர்களுக்கும் இந்த நிறுவனம் பெரியளவில் உதவி வருகின்றது.
தற்பொழுது இந்த மொஸாக் பொன்சேக நிறுவனத்தின் பதினொரு மில்லியன் வரையான ஆவணங்களை வோசிங்ரனை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் நூறுபேர் சேர்ந்துபனாமா பேப்பர்ஸ்என்ற பெயரில் கசியவிட்டுள்ளார்கள்.
இதனால் முன்னாள் லிபிய அதிபர் கடாபி, தற்போதைய சிரிய அதிபர் அஸாத், எகிப்தில் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட முபாரக், ரஷ்ய அதிபர் புடின்னின் நெருங்கிய நண்பர், பாகிஸ்தான் அதிபர், பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி உட்பட 140இற்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தமது பணத்தைப் பதுக்கி வைத்துள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த ஆவணங்களை ஜேர்மனியிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றுபனாமா ஆவணங்கள்என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் உலகநாடுகளிலேயே பெரும் மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றமையும் தெரியவருகின்றது.
இந்தத் தகவல்கள் கசிந்த மறுகணமே ஐஸ்லாந்துப் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆவணத்தின்படி ஐஸ்லாந்துப் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸனும் அவரது மனைவியும் வின்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்துள்ளனர்.
இதன்படி இவர்கள் பலகோடிக் கணக்கான பணத்தினை இந்த நிறுவனத்தில் பதுக்கியுள்ளனர். இதனால் நாட்டில் குழப்பமேற்பட்டு திங்கட்கிழமையன்று ஐஸ்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து இவர் பதவி விலகியுள்ளார். அடுத்த பிரதமராக இந்நாட்டின் விவசாய அமைச்சர் பதவியேற்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன நாட்டைப் பொறுத்தளவில் குற்றங்களைத் தட்டிக்கேட்கும் சீனப் பிரஜைகள் சுற்றிவளைத்து சிறையில் அடைக்கப்படுவார்கள். அண்மைக்காலங்களில் இதுதான் அந்நாட்டில் நடந்தும் வருகின்றது.
தற்போது ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ் கட்சிகள் கட்சிக்குள் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டுமென அண்மையில் லட்சக்கணக்கானவர்கள் தண்டிக்கப்பட்ட நிலையில்பனாமா ஆவணங்கள்கசிவு தற்போதைய சீன அதிபருக்கும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஏனென்றால் சீனாவில் ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் வரிவிலக்கு புகலிடம் என்ற பெயரில் வெளிநாட்டிலுள்ள நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்துள்ளனர். இதில் மூன்றுபேர் முக்கியமானவர்கள். அதில் தற்போது அதிபராக இருக்கும் க்ஷி ஜின்பிங், மற்றும் மூத்த அதிகாரிகளான சங்கௌலி மற்றும் லியூ யு சா. மூவரினதும் நெருங்கிய குடும்ப உறவினர்கள் இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் இயக்குநர்களாக அல்லது பங்குதாரர்களாக இருக்கின்றனர்.
சீனாவில் ஆட்சியிலிருக்கும் கம்யூனிஸ் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக உறவினர்கள் அரசியல் தொடர்புகள் மூலம் பயனடைவதை கட்சி எதிர்க்கின்றது. இதற்கு சீனாவில் தடையும் விதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் சீனாவுக்குள் இந்தச் செய்தி பரவுவதை சீன அரசாங்கம் தடைசெய்துள்ளது.
அங்குள்ள இணையத்தளங்களில் பனாமா பேப்பர்ஸ் எனத் தேடும்போது முடிவுசீனச் சட்டத்தை மீறும் செயல் என வருகின்றது
மேலும், இந்த ஆவணத்தில் ரஷ்ய அதிபர் புடின் இன் பெயர் இடம்பெறவில்லையாயினும்கூட அவர் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலரினை வங்கிகள் வழியாகவும், நிழல் நிறுவனங்கள் மூலமும் பதுக்கி வைத்திருப்பதாக புலனாய்வு செய்தியாளர்களின் பனாமா ஆவணங்கள் குற்றம் சாட்டி இருக்கிறது.
இதைவிட, உக்ரைன் ஜனாதிபதி, சவுதி அரேபியா மன்னர் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களும் இடம்பெற்று இருக்கின்றனர்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆவணங்கள் அனைத்துமே 35–க்கும் மேலான நாடுகளில் அலுவலங்களைக் கொண்டுள்ள பனாமாவைச் சேர்ந்த மொசாக் போன்செகா என்னும் சட்ட நிறுவனத்தின் வழியாக கசிந்து உள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இந்திய நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 500ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வரி மோசடி செய்து, பனாமா நாட்டில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகபனாமா பேப்பர்ஸ்வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
இந்த இரகசிய ஆவணத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று வாடிக்கையாளர்களும் 22 பங்குதாரர்களும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களை கசியவிட்டது சட்டப்படி குற்றம் என்றும் இது பனாமா நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் பனாமாநாட்டின் சட்ட நிறுவன தலைவர்களில் ஒருவரான ரோமன் போன்செகா குறிப்பிட்டார்.
தற்போது உல நாடுகளிலேயே பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் பனாமா பேப்பர்ஸ் இன் கசிவினால் பல நாடுகளும் தங்கள் நாட்டில் இந்நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ளவர்கள் மீது விசாரணை மேற்கொள்வதற்கு ஆரம்பித்துள்ளன.
இது தொடர்பில் பனாமா அதிபர் ஜூவன் கார்லோஸ் வெரெலா கூறுகையில், ‘வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் எங்களுடன் சில நாடுகளால் போட்டி போட முடியவில்லை. அவைதான் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளன. எனினும் எங்கள் நாட்டில், மறைமுகமான எந்த ஒப்பந்தங்களுக்கும் இடமில்லை. அதை நாங்கள் அனுமதிப்பதும் கிடையாது. இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்என்றார். http://ekuruvi.com/puraddipodda-06-04-2016/


Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்