பிதுர் தர்பணம் செய்யும் முறையும் வழிபாடும்

           செல்வசெழிப்புதரும் தைஅமாவாசை
       பிதுர் தர்பணம் செய்யும்  முறையும் வழிபாடும்        


                     தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்பணம் கொடுத்தால் ஸ்ரீமகாவிஷ்ணு சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும். ராமபிரான் தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் ராமரின் முன் தோன்றிமுன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்தால் அனைத்து பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும்என்றார். இரவு பகல் பாராமல்,பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் அமாவாசைகளில் மிக விசேஷமானது தை அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மராஜா அனுமதி தருவார். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள். நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருப்பார்கள். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தரவேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு, பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருணை காட்டது. உதவி செய்யாது என்கிறது கருட புராணம். கோடி புண்ணியம் தரும் எள் தானம். எள் ஸ்ரீவிஷ்ணு பகவானின் வியர்வையில் வியர்வையில் இருந்து உருவானது. எள் தானம் செய்தால் பல புண்ணியங்கள் கிட்டும். அதனால் தான், பித்ருக்களுக்கு பிண்டம் கொடுக்கும் போது எள்ளையும் கலந்தே தருகிறோம். தர்பைப் புல் ஆதியில் ஆகாயத்தில் உருவானது என்கிறது கருட புராணம். பல தேவர்களின் அருளாசியும், தெய்வங்களின் அருளாசியும் தர்பைக்கு இருக்கிறது. டி.வி.சானல் சிக்னல்களைப் பெற ஆண்டனா உதவுவதை போல, நாம் சொல்லும் மந்திரங்கள், மிக வேகமாக அந்தந்த தெய்வங்களை சென்றடைய தர்ப்பை உதவுகிறது. இப்படி சக்தி வாய்ந்த தர்ப்பையை கையில் வைத்துக் கொண்டு பித்ருக்களுக்கு பிண்டம் படைத்தால் அவை பித்ருகளை எளிதாக சென்றடைந்து அதன் பலனாக பல தோஷங்கள் நீங்கும். கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து பித்ருக்களின் படங்கள் இருந்தால் அதில் துளசி மாலையோ, அல்லது துளசி இலையோ சமர்பிக்க வேண்டும். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.
·                       
·                     வருமானத்தில் ஒரு பங்கில் பித்ரு பூஜை
·                     உலகை ஆளும் பரமசிவனிடம் ஒருநாள் பார்வதி தேவி, ஒரு மனிதனின் இல்லற தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு பரமசிவன் கூறியதாவது:- அறிவுள்ள மனிதன் தொழில் மூலமாக தான் பெரும் செல்வத்தை மூன்று பாகங்களாக பிரித்து அதில் தர்ம காரியங்களுக்கு ஒரு பாகம். வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு பாகம். கஷ்டம் ஏற்படுகையில் ஒரு பாகம் என்று பங்கீடு கொள்ள வேண்டும். இதில் முதல் பாகம் அன்னதானம் செய்வது. ஏழைகளுக்கு உதவுவது. தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும். இவ்வாறு சிவபெருமான் கூறினார்.
மூன்று கை தண்ணீர் போதும்முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர்தேவதைகளிடம்
“ஓம்ஸ்ரீம்ஸ்ரீரீம் சுகதேவியே சுவாஹா” 

என 7முறை கூறி தர்பணத்தை (எள் அன்னம்) 

நீரில் கரைத்து வேண்டி கொள்ள ஆத்மா 

லோக தலைமை பொறுப்பாளர் ஆன செளபா – 

சுகதேவி தம்பதிகள் பெற்று மறைந்த நம் 

முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. 

அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று 

ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை 

நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, 

பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் 

செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) 

மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது 

புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் 

அளவு நீரில் நின்றுகொண்டு சூரியனை நோக்கி 

மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் 

இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

 பிதுர்லோக நிர்வாகி செளபா சுகதேவி வழங்கும் ஸ்ரீபிரம்ம தேவரார் பிதூர்களின் குறைகளை நீக்க ஸ்ரீசூரிய தேவரின் பக்தர் வேண்டுகோளுக்காக தன்சின்யனான சிவனின் ருத்ர அவதாரமான ஸ்ரீராமர் பக்தர் ஸ்ரீஆஞ்சநேயர் படைத்த பிதுர்லோக நிர்வாக தேவர்ரிம் ஸ்ரீசெளமியா – சுவாதி தம்பதிகள் (சுவாதி ஸ்ரீபிரம்மதேவர் மகள் ஆவாள்)


Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்