கன்னி உத்ரம் நட்சத்திரம் 2,3,4 ம் பாதங்கள்



கன்னி உத்ரம் நட்சத்திரம் 2,3,4 ம் பாதங்கள்
பிறர் செய்த நன்றியை மறக்காதவரும் தெய்வீக வழிபாடுகளில் நம்பிக்கை கொண்டவரும் வாக்கு நாணயமும் தவறாதவரும், தைரியசாலியன தங்களுக்கு இதுவரை கடந்து வந்த பாதை பல காரியங்களை தைரியமுடன் செயல்படுத்த முயற்சி எடுத்து அக்காரியங்கள் இறுதியில் பின்னடைவு சந்தித்து கஷ்டங்களை கண்டு இருப்பீர்கள். ஒரு சிலர் குழந்தை வழியிலே மருத்துவச் செலவு செய்து இருப்பீர்கள். உங்களுடைய வாக்கு நாணயம் கேள்விக்குறியாக இருந்திருக்கும் ஒரு சிலர் இடம் விட்டு இடம் மாறி இருப்பீர்கள்.. ஒரு சிலர் தன் காரியத்தை விட்டுக் கொடுத்து மற்றவர் காரியங்களை செயல்படுத்தி இருப்பீர்கள். இராகு தாக்கத்தினால் பல இன்னல்களை புரியாமல் குழப்பத்தோடு கனாப்படுகிறீர்கள்.
இனி செவ்வாய் சனி செர்க்கைகுரிய பலன்கள்
பூர்விக சொத்தின் அடிப்படையில் பண வரவுகள் வரும். தொழில் வேலை நிமித்தமாக அலைச்சல் அதிகப்படியாக இருக்கும். புதிய வேகத்தோடு தொழில் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்ற போது கூட சில சங்கடங்களும், கடன்களும் உருவாகும். ஒரு சிலருக்கு கை தோள்பட்டை போன்ற பகுதியில் ரண சிகிச்சை ஏற்படலாம். குறிப்பாக மாசி மாதம் 23ம் தேதி தொடங்கி வைகாசி 7ம் தேதி வரை சில விருப்பதக்காத சம்பவங்களும், கரும காரியங்கள் செய்ய வாய்ப்பு ஏற்படும். தங்கள் 7ம் ராசிக்கு 7ம் இடத்தில் யுரேனஸ் கிரகமும் சஞ்சாரம் கொண்டு இருக்கிறது. இக்கால கட்டத்தில் மனம் ஒரு திட நிலையில் இருக்காது. மனதை அடக்கி தெய்வீக வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். விசித்திரமான கனவுகளும், ஒரு சிலருக்கு தெய்வீக யோக சக்திகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தங்களுடைய தாய்வழியில் மருத்துவ செலவினங்களும், அவசிய செலவினங்களும் ஏற்படலாம். இதுவரை பழக்கத்தில் உள்ள நண்பர்கள் பங்குகரர்களுக்கு இடைய கருத்து வேறுபாடுகளும் சில சங்கடங்களும் ஏற்படலாம்.
தசமி திதியில் பிறந்தவர்களுக்கு மாசி மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் தேவையான ஒரு சிறப்பான நன்மை ஏற்படும். குறிப்பாக அரசு வழி உதவிகள் வேலைவாய்ப்பு புதிய தொழில் அமைவது போன்ற நற்காரியங்கள் இத்திதி யில் பிறந்தவர்களுக்கு சிறப்புடன் நடைபெறும். எனவே இத்திதியில் பிறந்தவர்கள் மாசி மாதம் தசமி திதி வருகின்ற திருநாளன்று கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று 18 அகல் விளக்குகளில் ஒரு விளக்குக்கு 2 திரி என்ற முறையில் பசு நெய் ஊற்றி 36 தீபசுடர் எரிய வைத்து
ஓம் ஸ்ரீம் சிவ சூர்யாய நமஹ
ஓம் ஸ்ரீம் சிவ செவ்வாய் பகவன் நமஹ
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ சனிஸ்வராய நமஹ
என்ற மந்திரத்தை உச்சரிப்பு செய்து வழிபட்டு சிறந்த நன்மை பெறுவீர்கள்.
மற்ற திதியில் பிறந்தவர்களுக்கு கீழ்க்கண்ட பரிகார ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டு பயன் பெறுவீர்கள்.
கோவில் பெயரும் முகவரியும்
அரதை பெரும் பாழி ஹரித்வாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோவில் ஹரித்வாரமங்கலம் அஞ்சல் வலங்கைமான் வட்டம். திருவாரூர் மாவட்டம் 612802 குடந்தை மன்னார்குடி பாதையில் வெட்டாருப் பாலம் தாண்டி அமராவதி ஊரிலிருந்து வலம். அம்மாபேட்டை சாலையில் சென்று கீழப் பாலத்தில் இடம் பிரிந்து பெருங்குடி தாண்டி ஊர் தஞ்சை அம்மாபேட்டை பேருந்து செல்கிறது.
தல வரலாறு
திருமால் பன்றி வடிவங்கொண்டு இறைவன் முன்பு பள்ளம் பரித்தமையால் அரி துவார மங்கலம். நடராஜர் வியாக்ரபாதர் பதஞ்சலியுடன் காட்சி மூலவர் முன்னால் சற்றுப் பக்கவாட்டில் கல் இட்டு முடியுள்ள இடமே. பிலம் (துவரம்) என்றும் இவ்வழி. அரி வராகமாக தோண்டிச் சென்றதாக கூறப் படுகிறது. அலங்கரவல்லி உடனுறை  பாதாளேஸ்வரர் 06.00 - 12.30 04.00 -08.00
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்