கன்னி அஸ்தம்
கன்னி அஸ்தம்
நற்காரியங்களின் பிரியமும், புன்னகையில் மகிழ்ச்சியும், எல்லோரிடமும் சகஜமாக
பேசும் தன்மையும், திட மனமும் உள்ள தங்களுக்கு இதுவரை கடந்து வந்த பாதை தங்களுக்கு
ஏழரை சனியின் தாக்கம் முடிந்து விட்டது என்ற போதும் ஏழரை சனி காலத்தில் ஏற்பட்ட
இன்னல்களும் மனக் கஷ்டம் பணக் கஷ்டம் போன்றவைகள் மாற்றியமைக்க பல புதிய
வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி செய்த போதும் கூட சனிபகவான் பகை பெற்ற வீட்டில்
அமர்ந்து குருவை 10 ம் பார்வை பார்த்ததின் காரணமாகவும் உபய ராசிக்கு அதிபதியான குருபகவான்
அதற்கு முந்தைய காலத்தில் கடகத்தில் உச்சம் பெற்று திகழ்ந்ததின் காரணமாகவும் ஜென்ம
ராசியில் நல்ல ராகு என்று வர்ணிக்கின்ற ராகுபகவான் சஞ்சாரம் செய்த போது கூட தனது
ஜெனன பகைவர்கள் என்று சொல்லக்கூடிய சந்திர, சூரியன், வழியிலே சென்று
கொண்டிருந்ததின் காரணமாக நிலையான முடிவுகள் எடுப்பதில் குழப்பங்களும் நட்பு
வட்டாரத்தில் பிரிவினைகளும், வாக்குறுதிகளில் பிழைகளும் ஏற்பட்டு ஒரு சூழ்நிலைக்
கைதியாக இருப்பீர்கள். குறிப்பாக சந்திர திசை, சந்திர புத்தி, சூரிய திசை, சூரிய
புத்தி, நடைபெற்றவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். மாசி மாதம் 28 ம் தேதிக்குப் பிறகு பெண் வழியில்
நன்மையும் மகிழ்ச்சியும் தந்தை வழி சொத்துக்கள் மூலமாக பணவரவும், புதிய நட்புக்கள்
வழியில் நன்மையும் ஏற்படத் துவங்கும். இந்த செவ்வாய் சனி சேர்க்கையை ஆய்வு
செய்யும் பொழுது மாசி 23 முதல் வைகாசி 7 வரை உள்ள காலகட்டங்களில் பிறப்பு
ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலு குறைந்து காணப்பட்டாலும் சில சங்கடங்களை
சந்திப்பீர்கள். எச்சரிக்கை தேவை. கருவுற்ற தாய்மார்களுக்கு உடலில் நரம்பு
சம்பந்தப்பட்ட கோளாறுகளை சிறப்பு மருத்துவர் கொண்டு கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரங்கள்
திருமுகத்தலை பன்னத்தெரு பன்னகா பரனேஸ்வர சுவாமி திருக்கோவில், பன்னத்தெரு,
மாராச்செரி அஞ்சல் (வழி) பாமணி திருக்குவளை வட்டம் நாகை மாவட்டம்.
செல்லும் வழி
திருத்துறைப்பூண்டி நாகை வேளாங்கண்ணி பாதையில் 4 கி.மி. துரத்தில்
கொக்காலடி என்னும் ஊரை அடைந்து மாராச்சேரி பாதையில் (மானாச்சேரி) 3 கி.மி.ல் ஊர். மன்னார்குடியிலிருந்தும் வரலாம்.
ஆதிசேடனுக்கு குஷ்டம் நீக்கிய தலம். மஹா கால பைரவர் தலம். நளன், தமயந்தி, ஸ்ரீ
சனிஸ்வர பகவான் அனுக்கிரகம் பெற்ற தலம். எதிர்பக்கம் சூர்ய தீர்த்தம் பண்டைய
காலத்தில் முகத் தலைவிலங்கம் அமைந்த தவ மாதலால் இப் பெயர் மதுரை ஆதினக் கோவில் கருவூர்த்
தேவரின் திருவிசைப்பா பாடல் பெற்ற தலம், சாந்த நாயகி உடனுறை பன்னகாபரனேஸ்வர்
தங்களின் சுய ஜாதகத்தை
பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும். myathistam@gmail.com
Comments
Post a Comment